தமிழ் மரபை சீனர்களிடம் கொண்டு சேர்ப்பதே லட்சியம்! - தமிழ்ப் பேராசிரியை ஷௌ ஷின் | Spreading tamil tradition to Chinese that's my ambition - Chinese women Zhou Xin

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (18/09/2018)

கடைசி தொடர்பு:17:03 (18/09/2018)

தமிழ் மரபை சீனர்களிடம் கொண்டு சேர்ப்பதே லட்சியம்! - தமிழ்ப் பேராசிரியை ஷௌ ஷின்

சீனாவின் பெய்ஜிங் நகரில் இயங்கிவரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கென தனியாக ஒரு துறை தொடங்கப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 10 மாணவர்கள் 'தமிழ் மொழி மற்றும் இலக்கியம்' பற்றிய நான்கு வருட பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளனர். நேற்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தமிழ் கற்கும் சீனப்பெண்கள்

பேராசிரியர்கள் ஈஸ்வரி மற்றும் கலாதி வீராசாமி ஆகிய இருவரும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க இருக்கிறார்கள். நேற்று தமிழ்த்துறையின் தொடக்கவிழா நடந்தது. தொடக்க நிகழ்வில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இளைஞர் பாசறை பன்னாட்டு பொறுப்பாளர் வெற்றிச்செல்வன் அமெரிக்காவிலிருந்து இணையம் வழி வரவேற்று பேசினார். 

மாணவர்கள்

பேராசிரியை ஈஸ்வரியிடம் பேசினோம். ``வணக்கம், என்னுடைய உண்மையான பெயர்  ஷௌ ஷின் (Zhou Xin). தமிழ் மொழி மீதிருக்கும் பற்றின் காரணமாக என் பெயரை ஈஸ்வரி என மாற்றிக்கொண்டேன். சீனாவில் உள்ள கம்யூனிகேஷன் யுனிவர்சிட்டியில் தமிழ் படித்தேன். தொடர்ந்து தமிழ் மொழி பற்றி பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். சீன மக்களுக்கும் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்கலாம் என முடிவு செய்தோம். அதனால், சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ் மொழிக்கென (School of Asian and African Studies) ஒரு துறையைத் தொடங்கியிருக்கிறோம். ஒன்பது மாணவிகள், ஒரு மாணவர் உட்பட 10 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். தமிழ் மொழியில் எழுதுவது, படிப்பது, தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், பழக்கவழக்கங்கள் பற்றி பயிற்றுவிக்க இருக்கிறோம். அதுவே என் லட்சியமும் கூட’’ என்கிறார் பேராசிரியை ஷௌ ஷின் என்ற ஈஸ்வரி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க