வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (19/09/2018)

கடைசி தொடர்பு:18:45 (19/09/2018)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் சிறைத்தண்டனை ரத்து!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரின் மகளுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

நவாஸ் ஷெரிப்

லண்டனில் சொத்துகள் வாங்கியது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீஃப், அவரின் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டனர். புற்றுநோய் பாதிப்பு காரணமாக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நவாஸ் ஷெரீஃபின் மனைவி குல்சூம் நவாஸ் சமீபத்தில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர்கள் இருவருக்கும் பரோல் விடுப்பு வழங்கப்பட்டது. 

இந்தநிலையில், நவாஸ் ஷெரீஃப் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.