வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (20/09/2018)

கடைசி தொடர்பு:07:55 (20/09/2018)

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது!

மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், 1,849 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். 

 

நஜீப் ரசாக் - மலேசிய முன்னாள் பிரதமர்

மலேசியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியடைந்த பேரிசன் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த பிரதமர் நஜீப் ரசாக் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த 92 வயதான மகாதிர் முகம்மது பிரதமராகப் பதவியேற்றார். இந்த நிலையில் நஜீப் ரசாக், மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவர் அதிகளவு சொத்துக் குவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரின்பேரில் ரசாக்கிற்குச் சொந்தமான கட்டடங்களில் மலேசிய ஊழல் தடுப்புப் படையினர் நடத்திய சோதனைகளின்போது 273 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 1,848 கோடி) நகைகள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், ரசாக்கின் 408 வங்கிக் கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்தனர். 

நஜீப் ரசாக், அவருடைய மனைவி ரோஸ்மா மன்சோர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கோலாலம்பூரில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் நஜீப் ரசாக் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க