‘கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்’ - நைஜீரியாவில் சரக்கு கப்பல் சிறைபிடிப்பு 12 மாலுமிகள் கடத்தல் | Pirates kidnap 12 crew members from Swiss merchant vessel

வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (23/09/2018)

கடைசி தொடர்பு:05:45 (23/09/2018)

‘கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்’ - நைஜீரியாவில் சரக்கு கப்பல் சிறைபிடிப்பு 12 மாலுமிகள் கடத்தல்

நைஜீரியாவில் கோதுமை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்துள்ளனர்.

கடற்கொள்ளையர்கள்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று நைஜீரியாவின் லாகோஸ் நகரில் ஹார்கோர்ட் துறைமுகத்திற்கு கோதுமை ஏற்றிக்கொண்டு சென்றது. கப்பல் நைஜீரிய கடல் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்குள்ளானது. கப்பலில் ஏறிய கொள்ளையர்கள் அதில் இருந்த 19 மாலுமிகளில் 12 பேரை சிறைபிடித்து சென்றுள்ளனர்.கப்பலில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். கொள்ளையர்களால் சரக்கு கப்பல் சிறைப்பிடிக்கப்பட்ட விவரத்தை அந்த கப்பலில் கேப்டன் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார், 

கடத்தப்பட்டவர்களைப் பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகக் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது, கடத்தப்பட்ட மாலுமிகள் 12பேரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அவர்கள் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள் இல்லை என்ற தகவல் மட்டும் தெரியவந்துள்ளது.