மலேசிய விமானம் மாயமானது எப்படி? - வைரலாகும் ஆவணப் படம் | documentary released Malaysia Airline flight final moments

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (25/09/2018)

கடைசி தொடர்பு:17:36 (25/09/2018)

மலேசிய விமானம் மாயமானது எப்படி? - வைரலாகும் ஆவணப் படம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் மாயமான மலேசிய விமானம் எப்படி விபத்தைச் சந்தித்திருக்கும் என்பது குறித்து தற்போது ஓர் ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது. 

விமானம்

மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 777-200 விமானம் MH370 கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி கோலாலம்பூரிலிருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங்குக்குச் செல்லும் வழியில் மாயமானது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் விமானத்துக்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இப்போது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்துவருகிறது. எப்படி விமானம் மாயமானது, தீவிரவாதிகள் சதியா, இயந்திரக் கேளாறா அல்லது கடலில் வீழ்ந்ததா எனப் பல கேள்விகள் எழுந்தன. இதைத் தேடும் பணியில் சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர், ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் நவீன ரக கப்பல்கள் மற்றும் விமானங்கள் களத்தில் இறங்கின. சீனா மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்துக் கடல் பகுதிகள் மற்றும் தரைப் பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. மூன்று ஆண்டுகளாகத் தேடியும் விமானத்தின் ஒரு பாகம்கூடக் கடலின் அடியிலோ தரையிலோ கிடைக்கவில்லை. எனவே அனைத்து நாடுகளும் தங்களின் தேடுதல் பணியை நிறுத்திகொள்வதாகக் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. 

இதையடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எப்படிக் காணாமல் போயிருக்கும் என்பது தொடர்பாக ஓர் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் விமானம் தொலைவதற்கு முன்னாள் விமானி பேசியவற்றை வைத்து யூகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆவணப் படத்தின்படி விமானம் இந்தியப் பெருங்கடலுக்கு மேல் பறந்துகொண்டிருக்கும்போது எரிபொருள் தீர்ந்து எப்படி சில தூரம் வரை பயணித்திருக்கும் என்பது போன்ற காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளது. முதலில் ஓர் இன்ஜின் செயல் இழக்க மற்றொரு இன்ஜினின் உதவியுடன்தான் விமானம் சிறிது தூரம் வரை சென்றுள்ளது. பிறகு அதனாலும் சமாளிக்க முடியால் போகவே விபத்து ஏற்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி இந்த ஆவணப் படத்தைத் தயாரித்துள்ளது. 

Independent செய்தி ஊடகத்தில் வெளியாகியுள்ள ஆவணப்படத்தின் வீடியோ லிங்க்

Video Credits : Independent