நிறைவேறிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் - ஸ்வீடன் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ஸ்டீபன் | Sweden's parliament ousts prime minister

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (26/09/2018)

கடைசி தொடர்பு:07:33 (26/09/2018)

நிறைவேறிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் - ஸ்வீடன் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ஸ்டீபன்

ஸ்வீடன் நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் லாஃப்வென்னுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் திர்மானம் வெற்றிபெற்றதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 

சுவீடன் பிரதமர்

சமூக ஜனநாயகம் (Social Democrat) கட்சியின் தலைவர் ஸ்வீடன் நாட்டு பிரதமராக 2014-ம் ஆண்டிலிருந்து இருந்துவந்தார்.  நேற்று, அவருக்கு  எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில், தீர்மானத்துக்கு ஆதரவாக 204 ஓட்டுகளும், எதிராக 142 ஓட்டுகளும் விழுந்தன. அதையடுத்து, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றிபெற்றது. அதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து ஸ்டீபன் லாஃப்வென் நீக்கப்பட்டார்.

இருப்பினும், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை அவர், பொறுப்பு பிரதமராகச் செயல்படுவார். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பது குறித்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரியாஸ் நார்லென் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பார் என்று தெரிகிறது. ஆனால், அதற்கு ஒருவார காலம் வரை ஆகும் என்று தெரிகிறது. உல்ஃப் கிரிஸ்டெர்சன் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.