``7 வயதில் சீண்டல், பதினாறில் பலாத்காரம்!'' - சல்மான் ருஸ்டியை மணந்த பத்மா லட்சுமி குற்றச்சாட்டு | chennai model Padma Lakshmi reveals she was raped at 16 in USA

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (26/09/2018)

கடைசி தொடர்பு:17:15 (26/09/2018)

``7 வயதில் சீண்டல், பதினாறில் பலாத்காரம்!'' - சல்மான் ருஸ்டியை மணந்த பத்மா லட்சுமி குற்றச்சாட்டு

ழுத்தாளரும் மாடல் அழகியுமான பத்மா லட்சுமி சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஸ்டியை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். மூன்று ஆண்டுக்ள சல்மான் ருஷ்டியுடன் வாழ்ந்த அவர், அமெரிக்காவில் வசிக்கிறார். அமெரிக்காவில் டி.வி. பிரபலமும்கூட. அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு ப்ரெட் கவானாஃப் என்பவரை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார். இவர் மீது பாலியல் புகார்கள் உள்ளன.

பத்மா லக்ஷ்மி

இந்த நிலையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பத்மா லட்சுமி எழுதிய கட்டுரையில், ``லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தன்னுடன் பழகிய 23 வயது இளைஞர் 16 வயதில் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போலீஸ் கேஸ் ஆகும் என்று பயந்து தான் வெளியே சொல்லவில்லை'' என்று  கூறியுள்ளார். ``சிறுமியாக இருந்தபோது சென்னையில் பாட்டி வீட்டுக்கு வந்தபோது,  உறவினர் ஒருவர் என்னை பாலியல்ரீதியாக சீண்டினார்'' எனவும் அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். ``உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ப்ரெட் கவானாஃப் மீது தற்போது இரு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர். என்னைப் போலவே அவர்களும் போலீஸ் பிரச்னைக்குப் பயந்து வெளியே சொல்லாமல் விட்டிருக்கலாம்'' என்றும் கட்டுரையில் பத்மா லட்சுமி தெரிவித்துள்ளர். மேலும் ``தனக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும். யாராவது பாலியல்ரீதியாக உன்னைச் சீண்டினால் கத்தி கூச்சல் எழுப்பி விடு. உன் அந்தரங்கப் பாகங்களைத் தொட யாருக்கும் அனுமதி இல்லை என்று அறிவுரை கூறி வளர்க்கிறேன்'' என்று கட்டுரையில் பத்மா லட்சுமி கூறியுள்ளார். 

தற்போது பத்மா லட்சுமிக்கு 48 வயதாகிறது. பத்மா பார்வதி லட்சுமி வைத்தியநாதன் என்பது முழுப் பெயர். மருத்துவரான இவரின் தாயார் விஜயா அமெரிக்காவில் பணிபுரிந்தார். அமெரிக்க குடியுரிமைப் பெற்றவர்.  சல்மான் ருஸ்டிக்குப் பிறகு ஆடம் டெல் என்பவருடன் சேர்ந்து பத்மா லட்சுமி வாழ்ந்தார். பத்மா லட்சுமிக்கும் ஆடம் டெல்லுக்கும் பிறந்த மகள்தான் கிருஷ்ணா. 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் தன் அரசியல் கருத்துகளை ஆணித்தரமாக எழுதக் கூடியவர் இவர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close