வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (27/09/2018)

கடைசி தொடர்பு:19:20 (27/09/2018)

``வாடிக்கையாளர்களின் பிரைவசியை பணத்துக்காக விற்றுவிட்டேன்"- வாட்ஸ்அப் இணை நிறுவனர்

தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமையை பணத்துக்காக விற்றுவிட்டேன் என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார் வாட்ஸ்அப்பின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன். கடந்த 2014-ம் ஆண்டில் வாட்ஸ்அப்பை 19 பில்லியன் டாலர்கள் கொடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதன் பிறகு கடந்த வருடம் அதிலிருந்து அதன் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் வெளியேறினார். அப்பொழுதே ஃபேஸ்புக் மீது பல குற்றச்சாட்டுகளை அவர் வைத்திருந்தார். 

 பிரையன் ஆக்டன்

இந்த நிலையில், ஃபோர்ப்ஸ் இதழுக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் இந்தச் சர்ச்சைக்குரிய தகவலை பிரையன் ஆக்டன் தெரிவித்திருக்கிறார். ``நான் எனது பயனாளர்களின் தனியுரிமையை ஒரு பெரிய லாபத்துக்காக விற்றுவிட்டேன். அதற்காக நான் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருந்தது. தற்பொழுது அந்த உணர்வுடனேயே தினமும் வாழவேண்டியிருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார். வாட்ஸ்அப்பை  ஃபேஸ்புக் நிறுவனத்தைக் கைப்பற்றும்போதே அதைப் பயன்படுத்துபவர்களின் தகவல்களை ஃபேஸ்புக் சேகரிக்கும் வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுந்தது. ஆனால், அதற்குத் தொடக்கத்தில் இருந்தே ஃபேஸ்புக் மறுப்பு தெரிவித்து வந்தது. End To End Encryption தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் மெசேஜ்களைக் கூட யாரும் இடைமறித்துப் படிக்க முடியாது என்று ஃபேஸ்புக் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.