வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (28/09/2018)

கடைசி தொடர்பு:21:00 (28/09/2018)

‘123 கோடி மதிப்பிலான காலணி!’ அதில் அப்படியென்ன ஸ்பெஷல்?!

உலகின் உயரமான கட்டடம் பூர்ஜ் கலிஃபா, செயற்கை தீவு பாம் ஜூமைரா (Palm Jumeirah) அலாவுதீனின் அற்புத விளக்கு, வாசனை திரவியங்கள் போன்ற ஏராளமான ஸ்பெஷல் விஷயங்களுக்குப் பேர் போன நகரம், துபாய். தற்போது மற்றும் ஒரு பிரத்யேகப் பொருள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. நம் அன்றாட வாழ்வின் அத்தியாவசியப் பொருளான காலணிதான் அது. இதுதான் உலகின் விலையுயர்ந்த காலணி. இதன் விலை ஜஸ்ட் 123 கோடி. ('நீ பார்த்த!' என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது பாஸ்!)

காலணி

 

ஜடா துபாய் எனும் காலணி தயாரிப்பு நிறுவனம்தான் இந்தக் காலணியை வடிவமைத்திருக்கிறது. இது 'வைரம்' பதித்த காலணிகளை மட்டுமே தயாரிக்கும் நிறுவனம். இவர்களின் இரண்டாவது பிரத்யேக காலணி கலெக்ஷனை வெளியிடுவதற்கான ப்ரமோஷன் வேளைகளில் ஒன்றுதான் இந்த விலையுயர்ந்த ஃபூட்வேர் ரிலீஸ். இது, 7 ஸ்டார் ஹோட்டல் பூர்ஜ் அல் அராபில் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்க தங்கத்தினாலான இந்தக் காலணியில் நூற்றுக்கணக்கான வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இதை செதுக்குவதற்கு, டிசைனர்கள் எடுத்துக்கொண்ட காலம், ஒன்பது மாதங்கள்! இந்தக் காலணியோடு, 12 முதல் 20 லட்ச மதிப்பிலான வைரம், ரூபி கற்கள், முத்து போன்றவைகள் பதித்த மேலும் மூன்று காலணிகளும் வெளியிடப்பட்டன.

 

Stilletos

இதற்குமுன், டிசைனர் டெப்பி வின்காமின் (Debbie Wingham) காலணிதான் உலகின் விலையுயர்ந்ததாக இருந்தது. அதன் விலை சுமார் ஒரு கோடி. இந்த ரெக்கார்டை ஜடா துபாய் நிறுவனம் உடைத்திருக்கின்றது.