வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (30/09/2018)

கடைசி தொடர்பு:09:20 (30/09/2018)

மேரிலேண்ட் பூங்காவில் வீல் சேருடன் வலம்வரும் ஆமை 

மேரிலேண்ட் உயிரியல் பூங்காவில் கால்கள் செயலிழந்த ஆமைக்கு மருத்துவர்கள் வீல் சேர் வடிவமைத்து பொருத்தியுள்ளனர். 

பூங்கா

Photo Credit: Maryland zoo

அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் உயிரியல் பூங்காவில் கடந்த ஜூலை மாதம் கடுமையான காயங்களுடன் ஒரு ஆமை இருப்பதை அங்கு பணிபுரியும் ஊழியர் கண்டுள்ளார். ஆமைக்கு பூங்கா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. எல்லன் பிரான்சன் என்ற மருத்துவர் தான் சிகிச்சை அளித்துவந்துள்ளார்.ஓடுபகுதிகளில் கடுமையான காயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து ஆமைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டது. பின்னங்கால்கள் செயலிழந்த நிலையில் அதனை அகற்றிவிட்டனர். இதன் காரணமாக நடக்க இயலாமல் சிரமப்பட்டது. இதனைக்கண்ட மருத்துவர் எல்லன் பிரான்சன் செயற்கை கால்கள் பொருத்த இயலாததால் வீல் சேர் வடிமைக்க முடிவு செய்தார். இதனையடுத்து பூங்காவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நான்காம் ஆண்டு கால்நடை மருத்துவ மாணவரின் உதவியை நாடியுள்ளார். ஆமைக்கு எந்த வடிவிலான வீல் சேர் உருவாக்குவது என்பது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டு அதனைப் படமாக வரைந்துள்ளனர்.இதனையடுத்து சமூக ஆர்வலரின் உதவியுடன் ஆமைக்கான வீல் சேர் தயார்செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அது பொருத்தப்பட்டது. முன்னங்கால்களின் உதவியுடன் ஆமை தற்போது இயல்பாகத் தனது பணிகளை மேற்கொள்கிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.