வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (01/10/2018)

கடைசி தொடர்பு:16:20 (01/10/2018)

புற்றுநோய் ஆய்வில் புதிய முயற்சி! அமெரிக்கா, ஜப்பான் டாக்டர்கள் 2 பேருக்கு நோபல் பரிசு!

இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு இருவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். 

தசுகோ ஹோஞ்ஜோ - ஜேம்ஸ் பி.ஆலீஸன்

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவருகிறது. உலக அளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசாக நோபல் பரிசு இருந்துவருகிறது. இந்தப் பரிசு, மக்களுக்குப் பயனளிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும், இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம், இலக்கியம் மற்றும் சமூகத்துக்குக் தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும். ஆல்பர்ட் நோபல் என்ற அறிஞரின் பெயரால் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜேம்ஸ் பி.ஆலீஸன் மற்றும் தசுகோ ஹோஞ்ஜோ ஆகிய இருவரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற உள்ளனர். புற்றுநோய்க்கான மருந்துகள் கண்டுபிடித்ததற்காக, அவர்கள் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தசுகோ ஹோஞ்ஜோ, ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். ஜேம்ஸ் பி.ஆலீஸன் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க