வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (02/10/2018)

கடைசி தொடர்பு:14:51 (02/10/2018)

மகாத்மா காந்திக்கு விருது வழங்கணும்! அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்

மகாத்மா காந்திக்கு, அமெரிக்காவின் உயர்ந்த விருதை வழங்குவதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மகாத்மா காந்தி

உலகில் சிறந்து விளங்கும் குடிமக்களுக்காக அமெரிக்க காங்கிரஸால் விருது(Congressional Gold Medal) வழங்கப்படுகிறது. இதுவரையில், வெளிநாட்டைச் சேர்ந்த தலைசிறந்து விளங்கிய தலைவர்கள் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் அன்னை தெரசா(1997), நெல்சன் மண்டேலா(1998), போப் ஜான் பால் 2(2000), தலாய்லாமா(2006), ஆங்சான் சூயி(2008), முகம்மது யூனஸ்(2010), ஷிம்மோன் பெரிஸ்(2014) ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த விருதை வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில், காந்திக்கு அந்த உயரிய விருதை வழங்கவேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கரோல் மலோனி தீர்மானம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தை மேலும், 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.