வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (02/10/2018)

கடைசி தொடர்பு:17:27 (02/10/2018)

லேசர் தொழில்நுட்பத்தில் புரட்சி!- பெண் உட்பட 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு!

2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவருகிறது. ஆல்பர்ட் நோபல் என்ற அறிஞரின் பெயரால் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுவருகின்றன. உலக அளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசாக நோபல் பரிசு இருந்துவருகிறது. இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம், இலக்கியம் போன்ற துறைகளில் மக்களுக்குப் பயனளிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும், சமூகத்துக்குக் தொண்டாற்றியவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மருத்துவத்தில் சாதித்ததுக்காக ஜேம்ஸ் பி.ஆலீஸன் மற்றும் தசுகோ ஹோஞ்ஜோ ஆகியோருக்கு நேற்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

அதேபோல் 2018-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெண் உட்பட 3 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், இன்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆர்தர் அஸ்கின், பிரான்ஸின் ஜிரார்டு மவுரு, கனடாவின் டோனா ஸ்டிக்லாண்டு ஆகிய விஞ்ஞானிகள் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆப்டிக்கல் ட்வீசர்ஸ் ((optical tweezers)) என்ற கண்டுபிடிப்புக்காகவும் இவர்களுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. மொத்தப் பரிசுத்தொகையில் பாதித் தொகை ஆர்தர் அஸ்கினுக்கும், மீதமுள்ள தொகை ஜிரார்டு மவுரு, டோனா ஸ்டிக்லாண்டுவுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க