வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (03/10/2018)

கடைசி தொடர்பு:19:13 (03/10/2018)

ஒரு பெண் உட்பட 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2018-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக ஆல்பர்ட் நோபல் என்ற அறிஞரின் பெயரால் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாள்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. புற்றுநோய் ஆய்வில் புதிய முயற்சிகளைக் கையாண்டு மருத்துவத்துறையில் சாதித்த அமெரிக்காவின் ஜேம்ஸ் பி.ஆலீஸன் மற்றும் ஜப்பானின் தசுகோ ஹோஞ்ஜோ ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதேபோல் அமெரிக்காவின் ஆர்தர் அஸ்கின், பிரான்ஸின் ஜிரார்டு மவுரு, கனடாவின் டோனா ஸ்டிக்லாண்டு ஆகிய விஞ்ஞானிகள் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி 2018-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிரான்சஸ் அர்னால்டு, ஜார்ஜ் ஸ்மித், பிரிட்டனின் கிரிகோரி வின்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணான ஃபிரான்சஸ் அர்னால்டுக்கு மொத்த பரிசுத்தொகையில் பாதித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 4 பெண்கள் மட்டுமே வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்றுள்ள அந்த 5 வது பெண்ணாக அர்னால்டு நோபல் பரிசு பெறவுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க