ஹூஸ்டன் தமிழ் இருக்கை - ரூ.1 கோடி கொடுத்து அசத்திய தமிழர் அமைப்பு! | Money donate for houston university to get tamil bench

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (03/10/2018)

கடைசி தொடர்பு:18:50 (03/10/2018)

ஹூஸ்டன் தமிழ் இருக்கை - ரூ.1 கோடி கொடுத்து அசத்திய தமிழர் அமைப்பு!

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் நிறுவ ஹூஸ்டன் தமிழ்ப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹூஸ்டன் பல்கலைகழகம்

உலகத்தமிழர்கள் அனைவரின் பங்களிப்பால் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கல்வியில் பிரசித்திபெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையானது வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹூஸ்டனில் தமிழர்களின் முன்னெடுப்பால், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ அனைத்து தமிழர்களின் உதவியை அங்கு அமைந்துள்ள தமிழ்ச் சங்கமானது நாடியுள்ளது. அதன் முதற்கட்ட நிதியாக ஒரு கோடி ரூபாயை நேற்று ஹூஸ்டனில் நடைபெற்ற சந்திப்பில் அங்குள்ள தமிழர்கள் வழங்கியுள்ளனர். ``ஹூஸ்டன் யுனிவர்சிட்டியில் தமிழ் இருக்கை அமைக்க மொத்தம் இந்திய ரூபாயில் 42 கோடி தேவைப்படுகிறது.

இதில் பாதித்தொகையான 21 கோடி ரூபாயை அமெரிக்க நாடு வழங்குகிறது. மீதமுள்ள 21 கோடி ரூபாயைச் சர்வதேச அளவில் அனைத்து தமிழர்களிடமும் திரட்ட முடிவு செய்துள்ள நிலையில், அதற்கான முதற்கட்ட நிதியை அமெரிக்க வாழ் தமிழர்கள் வழங்கி முன்னெடுத்துள்ளனர்” என ஹூஸ்டனிலிருந்து இதன் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை தெரிவித்தனர்.