வெளியிடப்பட்ட நேரம்: 21:29 (04/10/2018)

கடைசி தொடர்பு:21:38 (04/10/2018)

`H20 என்றால் என்ன?’ - வங்கதேச அழகிப் போட்டி நடுவரை அதிரவைத்த பதில்!

H2O-க்கு மீனிங் கேட்ட நடுவரை அதிரவைத்துள்ளார், மிஸ் வங்கதேச அழகி.

வங்கதேச அழகி

வங்கதேசத்தில் நேற்று 'மிஸ் வங்கதேசம்' அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு அழகிகள் கலந்துகொண்டனர். இதில் ஜெயிப்பவர்தான் உலக அழகிப்போட்டியில் வங்கதேசம் சார்பில் கலந்துகொள்வார். இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவர்களிடம் நடுவர்கள் கேள்விகள் கேட்டனர். அப்போது, போட்டியில் பங்கேற்ற ஒருவரிடம், `H2O என்றால் என்ன ’ என்ற கேள்வியை நடுவர்கள் எழுப்பினார். 

`H2O என்றால், ரெஸ்டாரன்டா என அவர் அப்பாவியாகக் கேட்க, நடுவர்கள் குழு வாயடைத்துப்போனது. H2O என்றால் தண்ணீர் என நடுவர்கள் விளக்கம் அளிக்க, ``டாக்காவில் இப்படி ஒரு ரெஸ்டாரென்ட் இருக்கிறது. அதான் இப்படிக் கூறினேன்" என அந்த அழகி தெரிவித்தார். ஆனால், `H2O என்றால் தண்ணீர் என 2-ம் வகுப்பு மாணவர்களுக்குக்கூட தெரியும். வங்கதேச அழகிக்குத் தெரியவில்லை' என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

இவர் பதிலளிக்கும் வீடியோ வைரலாக, அந்த அழகியைக் கலாய்க்கும் விதமாக H2O பெயரில் ட்ரோல் பாடல் ஒன்றும் வெளியாகி வைரலாகிவருகிறது. கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டி ஒன்றில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா கூறிய பதிலும், தற்போது வைரலாகிவருகிறது. அவரிடம், `தற்போது உயிரோடு இருக்கிறவர்களில் யார் மிகவும் வெற்றிகரமான பெண் என்று நினைக்கிறீர்கள்' என நடுவர் கேட்டார். அதற்குப் பதிலளித்த பிரியங்கா சோப்ரா, `அன்னை தெரசா’ என்று பதிலளித்தார். அன்னை தெரசா 1997-ம் ஆண்டே இறந்துவிட்டநிலையில், 2000-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பிரியங்கா சோப்ரா இந்தப் பதிலைக் கூறியிருந்தார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க