வெளியிடப்பட்ட நேரம்: 18:38 (05/10/2018)

கடைசி தொடர்பு:18:46 (05/10/2018)

``அந்தச் சிறுவனின் கோரிக்கையை நான் எப்படி மறுப்பேன்?” பொம்மைக்கு ஆபரேஷன் செய்த மருத்துவர்!

அறுவைசிகிச்சைக்காக ஆபரேஷன் தியேட்டருக்குள் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றபோது, அவன் கையில் வைத்திருந்த கரடி பொம்மையை நீட்டி, 'இதற்கும் அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?' எனக் கேட்டிருக்கிறான்.

பொம்மை

னடா மருத்துவர் ஒருவர், தன்னிடம் சிகிச்சை பெறவந்த சிறுவனின் கோரிக்கையை ஏற்று, அவனது கிழிந்துபோன கரடி பொம்மைக்கு அறுவைசிகிச்சை செய்திருப்பது, இணையத்தில் வைரல் ஹிட்டடித்து வருகிறது.

பொம்மைகனடாவின் நோவா ஸ்காஷியா பகுதியில் உள்ளது, ஐ.வி.கே ஹெல்த் சென்டர். இங்கே நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராக இருப்பவர், டாக்டர் டேனியல் மெக்நீலி. இவரிடம், ஜாக்சன் மெக்கீ என்ற 8 வயது சிறுவன், ஹைட்ரோசிஃபாலாஸ் (Hydrocephalus) என்ற நோய்க்கு அறுவைசிகிச்சைப் பெற வந்திருக்கிறான். இந்த நோய் உள்ளவர்களுக்கு, மூளையில் உற்பத்தியாகும் ஒருவகை திரவம் மிக அதிகமாகச் சுரக்கும். இதனால், பிறந்ததிலிருந்தே அதீத தலைவலியால் அவதிப்பட்டு வந்த சிறுவனுக்கு, தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகிறார் டாக்டர் மெக்நீலே.

அறுவை சிகிச்சைக்காக ஆபரேஷன் தியேட்டருக்குள் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றபோது, அவன் கையில் வைத்திருந்த கரடி பொம்மையை நீட்டி, `இதற்கும் அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?' எனக் கேட்டிருக்கிறான்.

பொம்மை

`இந்த அன்புக் கோரிக்கையை நான் எப்படி மறுப்பேன்?' என்ற டாக்டர், அந்த டெடி பியருக்கு ஆக்சிஜன் மாஸ்க் அணிவித்து, தையல்  போட்டு, சிறுவன் அறுவைசிகிச்சை மயக்கத்திலிருந்து தெளிந்ததும் கொடுத்திருக்கிறார்.

அதைப் பார்த்த மெக்கீ, மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் என்று அவர் தந்தை ரிக் மெக்கீ தெரிவித்துள்ளார். ''அவன் பிறப்பதற்கு முன்பே அந்தப் பொம்மை எங்களுக்கு அன்பளிப்பாக வந்தது. ஒரு குட்டிக் குழந்தையைப்போல அவன் அருகே அந்தப் பொம்மை படுத்திருப்பது அவனுக்கு மிகவும் பெருமிதமாக இருக்கும்'' என்கிறார்.

பொம்மைக்கு சிகிச்சை செய்ததை தன் ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் மெக்நீலே பதிவிட 30,000 லைக்ஸ்களை அள்ளியுள்ளது. “அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க நான் செய்த மிகச் சாதாரண விஷயம்தான் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

வணிகமயமாக மாறிவிட்ட மருத்துவ சூழலில், இதுபோன்ற சின்னச் சின்ன அன்புதான் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க