22 பேரை பலிவாங்கிய `நேட்' புயல் - மீட்புப்படையை திணறவைத்த கோஸ்டா ரிகா வெள்ளம்! | Recuers baffled because of Costa Rica flood damages...

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (06/10/2018)

கடைசி தொடர்பு:11:30 (06/10/2018)

22 பேரை பலிவாங்கிய `நேட்' புயல் - மீட்புப்படையை திணறவைத்த கோஸ்டா ரிகா வெள்ளம்!

கோஸ்டா ரிகாவில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மத்தியப் பள்ளத்தாக்கு, நிகோயா தீபகற்பம் போன்ற பகுதிகள் அதிகமான சேதங்களை சந்தித்து வருகின்றன. அங்கிருக்கும் பக்கிட்டா, புன்டரெனாஸ், சக்காரிட்டா, எல் எஸ்டாபோ, எல் ரோபிள் போன்ற இடங்களில் வாழும் மக்கள் முகாம்களுக்குத் தஞ்சம் புகவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். வடக்கு மாகாணங்களோடு கானாகாஸ்ட் கடலோரப் பகுதிகளை இணைக்கும் ரூட் 160 என்ற பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் தடைப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்துகொண்டிருப்பதால் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய அவசரநிலை கமிஷன் தலைவர் அலெக்ஸாண்டர் சோலிஸ் கூறியுள்ளார்.

கோஸ்டா ரிகா

Photo Courtesy: Vecinos de Nosara

மக்களின் கழுத்துவரை வெள்ளநீர் போகுமளவில் அங்கு சூழ்நிலை மிக மோசமாக உள்ளது. நேற்று நேட் புயலால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த எண்ணிக்கை மேலும் உயருமென்று கணிக்கப்படுகிறது. இன்னமும் பெரும்பான்மை மக்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மீட்கப்படவில்லை. சாலைகள், பாலங்கள் என்று அனைத்தும் சேதமடைந்து அவர்களை அணுகும் வழி தெரியாமல் மீட்புப்படையினர் திணறிக் கொண்டிருக்கிறார்கள். பசிபிக் கடற்கரையின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 


[X] Close

[X] Close