வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (07/10/2018)

கடைசி தொடர்பு:13:00 (07/10/2018)

வெடித்துச் சிதறிய டேங்கர் லாரி - பரிதாபமாக பறிபோன 50 உயிர்கள்!

காங்கோவில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்தில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

லாரி விபத்து

photo Credits : Twitter/@TheFilmyMaza

ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள கிசான்டு என்ற நகரில் நேற்று பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி எதிரில் வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பெட்ரோல் டேங்கர் அதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. வானளவில் எழும்பிய தீ பிழம்புகள் சாலைக்கு அருகில் இருந்த வீடுகளுக்கும் வேகமாகப் பரவ தொடங்கின. இதில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

photo Credits : Twitter/@AkahiNews

அருகில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இது பற்றி கூறும் போது, ‘ நாங்கள் எங்களால் முடிந்த வரையில் அனைவரையும் காப்பாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும் பலத்த காயத்தினால் சிலர் இறந்துள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வகையிலும் அரசு உதவ வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர். 

photo Credits : Twitter/@luchaRDC

2010-ல் இதே போன்ற ஒரு சம்பவம் காங்கோ கிராமத்தில் நிகழ்ந்துள்ளது அதில் சுமார் 220 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.