வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (08/10/2018)

கடைசி தொடர்பு:17:12 (08/10/2018)

`கேர்ள் ஃப்ரண்ட் விற்பனைக்கு..!’ - இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்

ன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் பயன்படுத்துவது இணைய வணிக முறையைத்தான். மொபைல் போன் தொடங்கி மளிகைப் பொருள்கள் வரையில் அனைத்தும் ஆன்லைன் சந்தையில் கிடைக்கின்றன. `மனிதர்களைத் தவிர ஆன்லைனில் எல்லாவற்றையும் விற்க/வாங்க முடியும் போல’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் சிலாகிப்பதைப் பார்க்க முடியும். ஆனால், வெளிநாட்டு இளைஞர் ஒருவரோ, தன் காதலியை ஆன்லைனில் விற்க முற்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். 

கெல்லி
 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் டேல் லீக்ஸ். இவர் தன் காதலி கெல்லியுடன் ஏற்பட்ட சின்னச் சண்டையில், காதலியைப் பழிவாங்கும் நோக்கில் ஒரு விபரீதமான செயலைச் செய்திருக்கிறார். கடந்த செப்டம்பர் 29ம் தேதி, தன் காதலியின் புகைப்படத்தை இபே ( E-bay) இணைய வணிக நிறுவனத்தின் தளத்தில் பதிவிட்டு,  `Girlfriend for sale’ என்று விளம்பரம் கொடுத்துள்ளார். கெல்லியின் புகைப்படத்துக்கு கீழ் அவரை மோசமாக விவரித்து டிஸ்கிரிப்ஷனும் கொடுத்துள்ளார்.

இ பே
 

டேல் கெல்லியின் புகைப்படத்தை பதிந்த சில மணிநேரத்தில் இ-பே  தளம் ‘இங்கு மனித உறுப்புகளை விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது’ என்று எச்சரிக்கை தகவல் கொடுத்து, கெல்லியின் புகைப்படத்தை தளத்தில் இருந்து நீக்கிவிட்டது. ஆனால், அதற்குள்  `கெல்லி விற்பனைக்கு’ என்னும் விளம்பரத்தை ஆயிரக்கணக்கானோர் பார்த்துவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் ஏலத்துக்கான மதிப்பையும் பதிவு செய்தனர். விளம்பரம் நீக்கப்படுவதற்கு முன் ஏலத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.67 லட்சம் ஆக இருந்தது. விளம்பரத்துக்குக் கீழே டேல்லை விமர்சித்தும் திட்டித் தீர்த்தும் கமென்ட் செய்திருந்தனர்.  `உன் காதலியை நான் வாங்கி கொள்கிறேன்’ என்று பலர் பதிவிட்டிருந்தனர்.

கெல்லி
 

கெல்லியின் புகைப்படத்தை இ-பே தளத்தில் பதிந்ததை மறந்துவிட்டு அன்றாட வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார் டேல். அன்றே கெல்லியுடன் அவர் சமாதானமும் ஆகிவிட்டார். அதே கையோடு கெல்லியுடன் டின்னருக்குச் சென்ற டேல்லுக்கு, இ-பே விளம்பரம் குறித்து நினைவுவர, பதறிப்போய் மொபைலை எடுத்துப் பார்த்தார். அவரின் விளம்பரம் நீக்கப்பட்டிருந்தது. கூடவே ஆயிரக்கணக்கான மெசெஜ்களும் வந்திருந்தன. அதிர்ச்சியில் உறைந்த டேல், இந்த விஷயத்தை கெல்லியிடம் கூறினார். முதலில் விஷயத்தை விழுந்து விழுந்து சிரித்த கெல்லி, ` இனி இப்படிச் செய்யக் கூடாது' எனக் கடிந்துகொண்டார். இதை கெல்லி ஜாலியாக எடுத்துக்கொண்டாலும்.  `இது மிகப்பெரிய தவறு’ என்று டேல்லை திட்டித் தீர்த்துவிட்டனர் நெட்டிசன்ஸ்

Source : Mirror 

நீங்க எப்படி பீல் பண்றீங்க