வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (08/10/2018)

கடைசி தொடர்பு:20:00 (08/10/2018)

மனிதச் சுவடுகள் அழிந்துபோன இடத்தில் மெகா சூரிய மின்சக்தி ஆலை! - உக்ரைன் அரசு சாதனை #Chernobyl

உக்ரைன் அரசு செர்னோபில்லில் சூரிய மின்சக்தி ஆலைத் திறக்கப்பட்டுள்ளது. இதில் என்ன பிரமாதம் என்கிறீர்களா? செர்னோபில் அணு உலை விபத்து நினைவிருக்கிறதா? உலகின் மிக மோசமான அணு உலை விபத்து அது. 

செர்னோபில்


அன்றைய காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தில் இருந்த உக்ரைனின் பிரிப்யாட் நகருக்கு அருகில்தான் செர்னோபில் அணுமின் உலை அமைந்திருந்தது. 1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி அதிகாலையில் முறையாகத் திட்டமிடப்படாத சோதனை ஒன்றை அணு உலையில் நடத்திக்கொண்டிருந்தபோது, பெரும் விபத்து நேர்ந்தது. இதையடுத்து, மின் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் அதன் அவசர காலப் பாதுகாப்பு அமைப்பைத் தொழிலாளர்கள் மூடினர்.

பாதுகாப்பு விதிமீறல் உள்ளிட்ட மனிதத் தவறுகளால் நேர்ந்த இந்த விபத்தால் சங்கிலித் தொடர்வினை ஏற்பட்டு அணு உலையில் வெடிப்புகள் ஏற்பட்டன. மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் அணுக் கதிர்வீச்சு வேகமாகப் பரவத் தொடங்கியது. பெலாரஸ், ரஷ்யா, உக்ரைனில் காற்றின் மூலம் பரவிய அணுக்கதிர்வீச்சு, பிரான்ஸ் மற்றும் இத்தாலி வரை பரவின. இந்த விபத்தில் இறந்தவர்கள் 31 பேர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், கதிர்வீச்சின் தாக்கத்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் லட்சக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்ததாக விஞ்ஞானிகள் கூறினர். மனிதர்கள் மட்டுமன்றி, கால்நடைகள், பறவைகளும் அதிகம் பாதிக்கப்பட்டன.

செர்னோபில்லுக்கு அருகில் உள்ள பகுதிகளில் குழந்தைகள் மனவளர்ச்சிக் குன்றி, பல்வேறு பாதிப்புகளுடன் பிறந்தன. ஏராளமான புற்றுநோய் மரணங்களும் நிகழ்ந்தன. பிப்ரியாட் மற்றும் செர்னோபில் ஆகிய நகரங்கள் மனிதர்கள் வாழத் தகுதியற்றவையாக அறிவிக்கப்பட்டன. அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் ஏற்பட இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அந்த இடம் அவை பயனற்ற நிலையில் காலியாகக் கிடந்தன.

செர்னோபில்

இந்நிலையில் செர்னோபில் அணு மின்நிலையம் இருந்த பகுதியில் மெகா சூரிய ஒளி மின்நிலையத்தை உக்ரைன் அரசு அமைத்துள்ளது. வாழத் தகுதியற்ற அந்த இடத்தில் சோலார் பேனல்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு செல்லும் ஆராய்ச்சியாளர்கள், கதிர்வீச்சை அளக்கும் சாதனங்களை வைத்துக்கொண்டுதான் செல்ல வேண்டுமாம். அங்கு 3,800 சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கிடைக்கும் மின்சாரத்தில் சுமார் 2,000 அபார்ட்மென்ட்களுக்கு மின்சாரம் சப்ளை செய்ய முடியும் என்கிறது உக்ரைன் அரசு.

செர்னோபில்
 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 36,000 டன் எடையுள்ள ஒரு பெரிய வளைவுக் கம்பியை (giant arch) செர்னோபில் அணு மின் நிலையத்தைச் சுற்றி கட்டமைத்து, கதிர்வீச்சைத் தடுக்கும் கருவியையும் பொருத்தினர். இதையடுத்து சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டன. உக்ரைன் அரசின் மிகப்பெரிய திட்டமாக இந்தச் சோலார் பேனல் திட்டம் பார்க்கப்படுகிறது!.

நீங்க எப்படி பீல் பண்றீங்க