வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (09/10/2018)

கடைசி தொடர்பு:13:16 (09/10/2018)

வாடிக்கையாளரின் பீட்சாவில் துப்பிய டெலிவரி பாய்க்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை! #Shocking

இணையத்தில் உணவுப் பொருள்களை ஆர்டர் செய்து சாப்பிடுவோருக்கு, இந்தச் செய்தி கொஞ்சம் அதிர்ச்சியளிக்கக்கூடியதாய் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் உணவைக் கொண்டுவந்து சேர்க்கும் இளைஞர்கள், சில சமயங்களில் பாதி உணவைத் தாங்களே சாப்பிட்டு விடுவதாக சில செய்திகள் வெளியாகின. டெலிவரி செய்யவேண்டிய உணவைப் பிரித்து, டெலிவரி பாய் ஒருவர் அவசர அவசரமாகச் சாப்பிடும் வீடியோ, இணையத்தில் வைரலாகின.  ஆனால், இம்முறை டெலிவரி பாய் ஒருவரின் சற்று வித்தியாசமான வீடியோ வெளியாகியுள்ளது.

டெலிவரி பாய்
 

துருக்கியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் புராக், பிரபல இணைய வணிக நிறுவனத்தில் உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் பணி செய்பவர். இவர், கடந்த ஏப்ரல் மாதம் வாடிக்கையாளருக்கு விநியோகிக்கவேண்டிய பீட்சாவில் எச்சில் உமிழ்ந்து, அதை செல்ஃபியும் எடுத்துள்ளார்.  இதை அதே குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் பார்த்துவிட்டார். மேலும், இந்தக் காட்சிகள் வாடிக்கையாளரின் அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி கேமராவிலும் பதிவாகிவிட்டன. இந்தக் காட்சியைப் பார்த்த நபர், வாடிக்கையாளருக்குக் கால் செய்து,  `உன் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் பீட்சாவில் டெலிவரி பாய் எச்சில் உமிழ்ந்துவிட்டார். எனவே, அதைச் சாப்பிட வேண்டாம்’ என்று தொலைபேசியில் தகவல் கொடுத்தார்.  அதையடுத்து, அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளைப் பார்த்த வாடிக்கையாளர் ஆத்திரமடைந்து, புராக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

டெலிவரி பாய்
Pic Credits : CEN

அந்த வழக்கு, இந்த மாதம் நீதிமன்றத்துக்கு வந்தது. நீதிபதி புராக்கிடம்,  `ஒருவரின் உணவில் எச்சில் உமிழ்ந்து தருவது மனிதத் தன்மையற்ற செயல். ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த புராக்,  `என் நண்பர் கடந்த வாரம் அதே வாடிக்கையாளர் வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்தார். அதைப் பெற்றுக்கொண்ட அந்த வாடிக்கையாளர், பீட்சா சூடாக இல்லை என்று என் நண்பரைத் தரக் குறைவாகப் பேசி சண்டை போட்டார். என் நண்பரின் வேலை பறிபோகும் அளவுக்குப் புகாரும் கொடுத்தார். எனவே, இம்முறையும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக, பீட்சா சூடாக இருக்கிறதா என்பதைச் சோதிக்கவே திறந்து பார்த்தேன். ஆனால், பீட்சாவில் நான் எச்சில் துப்பவில்லை; பீட்சாவுடன் செல்ஃபி மட்டுமே எடுத்தேன்’ என்றார். 

ஆனால் புராக்கின் வாக்குமூலத்தில் திருப்தியடையாத நீதிபதி, அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். உணவை நாசப்படுத்தி வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக, அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

பீட்சா டெலிவரி செய்த புராக்குக்குக் கிடைத்த தண்டனை சரியானதா? உங்களின் கருத்து என்ன?

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க