`பூமி வெப்பநிலை உயர்வால் இந்திய நகரங்களுக்கும் அச்சுறுத்தல்!’ - எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வறிக்கை | Deadly heatwaves could hit kolkata, India and Pakistan could face worst condition, says climate change report

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:21:00 (09/10/2018)

`பூமி வெப்பநிலை உயர்வால் இந்திய நகரங்களுக்கும் அச்சுறுத்தல்!’ - எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வறிக்கை

இந்தியாவின் கொல்கத்தாவும் பாகிஸ்தானின் கராச்சியும் 2015-ம் ஆண்டுக்குச் சமமான அனல் காற்றின் வெப்பத்தைச் சந்திக்க வேண்டி வரும் எனச் சொல்கிறது அறிக்கை

இந்தியா மிக ஆபத்தான அனல் காற்றைச்(Heatwaves) சந்திக்க வேண்டி வரும் என அச்சத்தைக் கிளப்பியிருக்கிறது காலநிலை மாற்றத்துக்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் அறிக்கை (UN's Intergovernmental Panel on Climate Change (IPCC)). பூமியின் வெப்பநிலை 2 செல்சியஸ் உயர்வதால் என்னவெல்லாம் நடக்கும் எனக் கூறக்கூடிய இந்த அறிக்கை. கடந்த ஜுலை மாதமே இந்த அறிக்கையின் சில பகுதிகள் இணையத்தில் தவறுதலாக வெளியாகின. எனவே, இது உலகம் முழுவதும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கைகளில் ஒன்று. 

கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் இந்தியா, பாகிஸ்தான் என இருநாடுகளையும் சேர்த்து 3,600-க்கும் மேற்பட்டோர் அனல் காற்றாலும் வெப்பத்தாலும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 2,500 பேர் உயிரிழந்தனர். அறிக்கையின் தாக்கங்கள் குறித்த உரையாடல் இந்த வருட இறுதியில் போலந்தில் நடைபெறுகிறது. உலக வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்சியஸை கடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. 2030-க்குள் 1.5 டிகிரி செல்சியஸிற்கும் 2 டிகிரி செல்சியஸுக்கும் பூமியின் வெப்பநிலை உயர்ந்துவிடும் அப்படி நடந்தால் விளைவுகள் இன்னும் அதிகமாகிவிடும். 

இந்தியாவின் கொல்கத்தாவும் பாகிஸ்தானின் கராச்சியும் 2015-ம் ஆண்டுக்குச் சமமான அனல் காற்றின் வெப்பத்தைச் சந்திக்க வேண்டி வரும் எனச் சொல்கிறது அறிக்கை. பூமி வெப்பநிலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது கடலோர நகரங்களே. அதன்படி கொல்கத்தாவும் கராச்சியும் அதீத ஆபத்தில் இருக்கின்றன. 

பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்வதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று வறுமை நிலையை அதிகப்படுத்துவது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற வளர்ந்துவரும் நாடுகள் இதனால் அதிகம் பாதிக்கப்படும். உணவு பாதுகாப்பின்மை, விலையேற்றம், வருமான இழப்புகள், வாழ்வாதார வாய்ப்புகளை இழத்தல், வாய்ப்புகள், வேலை தேடி மக்கள் இடம்பெயர்வு எனப் பல்வேறு வகையிலும் மறைமுகமாக வெப்ப உயர்வு வறுமையை அதிகப்படுத்துகிறது என உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organisation) உட்படக் காலநிலை மாற்றத்துக்கான அமைப்புகளும் கூறுகின்றன. காலநிலை மாற்றம் கணிசமாக உயர்கின்ற வெப்ப உயர்வு தொடர்பான இறப்புகளில் முக்கிய பங்காற்றுகிறது. புவி வெப்பமடைதல் 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டக் கூடாது என அறிக்கை கூறுகிறது. 

பூமியின் வெப்பமயமாதலையும் காலநிலை மாற்றத்தையும் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த அறிக்கையும்கூட. 
 


[X] Close

[X] Close