வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (10/10/2018)

கடைசி தொடர்பு:15:25 (10/10/2018)

#metooவுக்கு எதிராக #HimTooவை உருவாக்கிய தாய்! - முற்றுப்புள்ளி வைத்த அமெரிக்க இளைஞன்

அமெரிக்கப் பெண்மணி ஒருவர், ஆண்கள் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து, பெண்ணியம் பேசும் பெண்களுக்கு எதிராக, தன் மகனின் புகைப்படத்துடன் #HimToo என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினார்.

ருபுறம், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் #metoo ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. மறுபுறம், அமெரிக்கப் பெண்மணி ஒருவர், ஆண்கள் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து, பெண்ணியம் பேசும் பெண்களுக்கு எதிராக, தன் மகனின் புகைப்படத்துடன் #HimToo என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினார். பலரும் அந்த ட்விட்டை ட்ரோல் செய்யும் வகையில், விசித்திரமான புகைப்படங்களுடனும் ட்வீட்களும் மீம்களும் உருவாக்கிக் கலாய்த்துக்கொண்டிருந்தனர்.

அமெரிக்க இளைஞன்

இந்த நிலையில், தன் சகோதரரின் புகைப்படம் மீம்களாக ட்விட்டரில் உலவுவதைக் கவனித்த ஜான் ஹன்சன் என்பவர், 'என் சகோதரனுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. இப்போது, சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை' எனவும் ட்விட்டரில் பதிவிட்டார்.

இந்த காமெடி கலாட்டா பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த பீட்டர் ஹன்சன் என்ற அந்த இளைஞன், ட்விட்டரிலேயே இல்லையாம். இந்த விஷயம் கேள்விப்பட்ட பிறகு, @thatwasmymom என்ற பக்கத்தைத் தொடங்கி, ‘எங்க அம்மா செய்த ட்விட்டுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை’ என்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவ்வளவு பரபரப்பை கிளப்பும் வகையில், அந்தத் தாய் செய்த ட்விட்தான் என்ன?

அமெரிக்க இளைஞன்

பீட்டர் ஹன்சனின் புகைப்படத்துடன், 'இவர்தான் என் மகன். இவர், பூட் கேம்ப் (Boot Camp) முதல் இடம்பெற்றவன். யூ.எஸ்.ஒ அவார்டு பெற்றவன். ஏ ஸ்கூலில் (A School) முதல் இடம்பெற்றவன். பெண்களை மதிக்கும் ஜென்டில்மேன். ஆண்களை எப்போது பாலியல் குற்றச்சாட்டு வலைக்குள் சிக்கவைக்கலாம் எனக் காத்திருக்கும் தீவிர பெண்ணியவாதிகள் இருக்கும் இன்றைய சூழ்நிலையில், அவன் யாருடனும் தனியாக டேட்டிங் சென்றதில்லை. #HimToo-வுக்கு நான் வாக்களிக்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.

ட்விட்

இதைத் தொடர்ந்து நடந்த ஆன்லைன் கலாட்டாவுக்கு, ``அது என் அம்மாவின் ட்விட். சில நேரங்களில் நாம் விரும்பும் மனிதர்கள், சில செயல்கள் நம்மைக் காயப்படுத்தும் என்று அறியாமலேயே செய்வார்கள். நான் பெண்களை மதிப்பவன்; நம்புபவன். நான் ஒருபோதும் #HimTooவை ஆதரிக்க மாட்டேன். நான் கப்பற்படையில் கால்நடை மருத்துவர். உங்களின் மீம் விளையாட்டுக்கு இது முற்றுப்புள்ளி” என்று ட்விட் செய்து, இந்த டிரெண்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க