வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (10/10/2018)

கடைசி தொடர்பு:16:25 (10/10/2018)

மிகவும் வலிமையான பாஸ்போர்ட்! சிங்கப்பூரை விஞ்சியது ஜப்பான்

உலகிலேயே மிகவும் வலிமையான பாஸ்போர்ட் ஆக ஜப்பான் நாட்டு பாஸ்போர்ட் தேர்வாகியுள்ளது. 

பாஸ்போர்ட்

Pic Courtesy : Al Bawaba

Henley என்ற அமைப்பு சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்துடன் இணைந்து `பாஸ்போர்ட் ரேங்க்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் பாஸ்போர்ட்டுகள் குறித்த தர மதிப்பீட்டுப் பட்டியலை வெளியிட்டுவருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பட்டியலை அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஜப்பான் முதலிடம் பிடித்துள்ளது. ஜப்பான் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 190 நாடுகளுக்கு விசா இன்றியும் அல்லது வருகையின்போது விசா பெற்றுக்கொண்டால் போதும். 

முன்னதாக சிங்கப்பூர் பாஸ்போர்ட் வலிமையான ஒன்றாக இருந்தது. ஆனால், இந்த வருடத்தின் தொடக்கத்தில் மியான்மர் நாட்டுக்கு விசா இன்றி பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டதை அடுத்து ஜப்பான் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இப்பட்டியலில் மூன்றாவது இடத்தை ஜெர்மனி, தென்கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பகிர்ந்துகொள்கின்றன. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க முறையே இப்பட்டியலில் நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியா இந்தப் பட்டியலில் 81-ம் இடம் பிடித்துள்ளது. இந்தியா பாஸ்போர்ட் வைத்திருப்போர் 60 இடங்களுக்கு விசா இன்றியும் அல்லது வருகையின்போது விசா பெற்றுக்கொள்ள முடியும். சீனா 71-ம் இடமும், ரஷ்யா 47வது இடமும் பெற்றுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க