‘எங்களைக் கண்டதும் கட்டித் தழுவினர்’ - இந்தோனேசியக் குழந்தைகளை மகிழ்வித்த தன்னார்வலர்கள் | volunteers have brought toys to children in disaster-struck Indonesia

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (11/10/2018)

கடைசி தொடர்பு:09:20 (11/10/2018)

‘எங்களைக் கண்டதும் கட்டித் தழுவினர்’ - இந்தோனேசியக் குழந்தைகளை மகிழ்வித்த தன்னார்வலர்கள்

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவில் உள்ள குழந்தைகளை அங்குள்ள தன்னார்வலர்கள் மகிழ்வித்து வருகிறார்கள். 

இந்தோனேசியா

செப்டம்பர் 29, 2018 இந்தோனேசிய மக்களால் மறக்க முடியாத தினம். எதிர்பாராத நிலநடுக்கம், சுனாமியில் பாதிக்கப்பட்டு மீண்டு வரச் சிரமப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தோனேசியாவின் சுலவெசி தீவில், கடந்த மாதம் 29-ம் தேதி 7.5 என்ற ரிக்டர் அளவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில், சுலவேசி தீவின் வடமேற்குக் கடற்கரைப் பகுதியை சுனாமி தாக்கியது. 20 அடி உயரத்துக்கு எழும்பிய அலைகள், பலு நகரத்தில் பல்வேறு உயிர்களைப் பலிகொண்டது. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் சிலவேசி தீவில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரால், பல லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பேரிடரால் சுமார் 1,80,000 இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பேரிடரில் பாதிக்கப்பட்டு சோர்வடைந்த குழந்தைகளை உற்சாகப்படுத்தும் முயற்சியில் அந்நாடு தன்னார்வ அமைப்புகள் ஈடுபட்டுள்ளனர். ‘வின்னி தி போ’ ( Winnie the Pooh) என்ற பிரபல கார்ட்டூன் கதாபாத்திரம் போன்று உடையணிந்த சிலர், பலு தீவில் உள்ள குழந்தைகளுடன் விளையாடி, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். “குழந்தைகளின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ஆனால் அவர்கள், அதே அதிர்ச்சியில் இருக்க நாங்கள் விரும்பவில்லை. கார்ட்டூன் உடையில் எங்களைக் கண்ட சிறுவர்கள் உற்சாகமடைந்து கட்டித் தழுவினர். சில தன்னார்வலர்கள், தங்களால் முடிந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு வழங்கினர். இதை நாங்கள் பலு தீவு முழுவதும் செய்ய உள்ளோம்” என 'சேவ் தி சில்ரன்ஸ்' (Save the Children) அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ‘குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது மிகவும் இன்றியமையாதது. அதுவும், இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்களின் மனநிலையை மாற்ற எண்ணியே நாங்கள் இதைச் செய்தோம்’ என அந்த அமைப்பின் ஆலோசகர் கூறியுள்ளார். 


[X] Close

[X] Close