`எந்த நாடும் இதுவரை இப்படிச் செய்யவில்லை'- அசத்திய இங்கிலாந்து பிரதமர் தெரசா | Separate minister for suicide prevention

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (11/10/2018)

கடைசி தொடர்பு:15:35 (11/10/2018)

`எந்த நாடும் இதுவரை இப்படிச் செய்யவில்லை'- அசத்திய இங்கிலாந்து பிரதமர் தெரசா

வ்வொரு நாற்பது விநாடிக்கும் உலகில் ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிறார். நாடும் வீடும் உடல்நலப் பிரச்னைகளுக்கு செலுத்தும் கவனத்தை மனநலப் பிரச்னைகளுக்கு செலுத்தாததே இதற்கு காரணம். இதில் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது இங்கிலாந்து. தற்கொலை தடுப்புக்கென்று அமைச்சரை நியமித்து அசத்தியுள்ளார், அந்நாட்டின் பிரதமர் தெரசா மே. உலகத்தில் வேறு எந்த நாடும் எடுக்காத முயற்சி இது.

 

தெரசா மே

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு மட்டும் 5,800 பேர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். 20 முதல் 34 வயதுக்குட்பவர்களின் உயிரிழப்புகளுக்கான காரணங்களில் தற்கொலைதான் முதல் இடத்தில் உள்ளது.  மனநலப் பிரச்னைகளுக்கென்று பிரத்யேக கவனம் செலுத்தி வரும் பிரதமர் தெரசா மே, தனி ஒரு அமைச்சரை நியமித்ததோடு, சிறுவர்கள், இளைஞர்களுக்கான மனநலப் பிரச்னைகளைக் கண்டறியவும் சிறப்புக் குழுவை நியமித்துள்ளார்.

அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜாக்கி டோயில் பிரைஸ், ``தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்ட பலரை நான் சந்தித்திருக்கிறேன். அதன் பின்னால் இருக்கும் வலி, இழப்பு, என் தூக்கத்தைப் பல நாள்கள் கெடுத்திருக்கின்றன. தற்போது கிடைத்துள்ள வாய்ப்பின் மூலம் இதுபோன்ற மக்களின் நலனுக்காக நிபுணர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும். பிரத்யேக திட்டம் உருவாக்கப்படும்" என்று உறுதியளித்துள்ளார்.

தற்கொலை தடுப்பு அமைச்சர் ஜாக்கி டோயில் பிரைஸ்

 இதே பிரதமர் தான், கடந்த ஜூன் மாதம் தனிமையாக வாழ்வோரின் நலனுக்கான ஒரு அமைச்சரை நியமித்தார். தற்கொலை தடுப்பில் அக்கறை செலுத்தி, அமைச்சரை நியமித்த தெரசா மேவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.


[X] Close

[X] Close