பறந்துகொண்டிருக்கும்போது சொதப்பிய ராக்கெட்...பத்திரமாக பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்! | Astronauts safely landed after the Soyuz Rocket Launch Failure

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (12/10/2018)

கடைசி தொடர்பு:09:12 (12/10/2018)

பறந்துகொண்டிருக்கும்போது சொதப்பிய ராக்கெட்...பத்திரமாக பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்!

ராக்கெட்

விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் விண்வெளி வீரர்கள் சென்றுவருவது வழக்கம். இவர்கள், ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டின் மூலமாக அங்கே செல்வார்கள். அதன்படி, இன்று சோயுஸ் MS-10 என்ற ராக்கெட் மூலமாக ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவ்ச்சினின் (Alexei Ovchinin) மற்றும் அமெரிக்க விண்வெளி வீரரான நிக் ஹேக் (Nick Hague) இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல தயாராக இருந்தார்கள். இன்று காலை, அவர்கள் இருவரையும் சுமந்துகொண்டு  பைக்கனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆனால், சில நிமிடங்களிலேயே ராக்கெட்டின் பூஸ்டர்களில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது. எனவே, அடுத்த கட்ட நடவடிக்கையாக, அதில் பயணித்த விண்வெளி வீரர்களைப் பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கேப்ஸ்யூல்

அவரசகால வழிமுறைகளின்படி அவர்கள் இருந்த கேப்ஸ்யூல் ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டு, பூமியை நோக்கித் திருப்பப்பட்டது. அது 600 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜெஸ்கஸ்கான் (Zhezkazgan) என்ற இடத்தில் தரையிறங்கியது. அதில் இருந்த இரண்டு விண்வெளி வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள் இருவரும் நலமாக இருப்பதாகவும் நாசா தெரிவித்திருக்கிறது.
 


[X] Close

[X] Close