பிரசவத்துக்கு முன் `ஹாரர்' படங்களின் காதலர்கள் எடுத்த விசித்திரமான போட்டோ ஷூட்! |  Canada Couple takes Most terrifying maternity photo shoot

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (12/10/2018)

கடைசி தொடர்பு:13:20 (12/10/2018)

பிரசவத்துக்கு முன் `ஹாரர்' படங்களின் காதலர்கள் எடுத்த விசித்திரமான போட்டோ ஷூட்!

ஹாரர் வகை படங்களின் காதலர்களான கனடாவைச் சேர்ந்த தம்பதியினர் விசித்திரமான மகப்பேறு போட்டோ ஷூட் எடுத்து முகநூலில் பதிவு செய்துள்ளனர்.

கனடா

கனடாவைச் சேர்ந்த டோட் (Todd), நிக்கோலே கேமேரான் (Nicole Cameron) தம்பதியர் மகப்பேறு காலத்தில் போட்டோ ஷூட் எடுக்க முடிவு செய்துள்ளனர். நிக்கோலே கேமேரானுக்கு பிரசவத்துக்கான தேதி வரும் 17 என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒருவாரத்துக்குள் வழக்கமான முறையில் இல்லாமல் வித்தியாசமாகப் போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் என இருவரும் முடிவு செய்தனர். இருவரும் ஹாரர் வகை படங்களின் காதலர்கள். மேலும் இந்த மாதம் ஹாலோவன் திருவிழாவும் நடைபெறும். இவை இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரு வித்தியாசமான போட்டோ ஷூட் எடுக்க முடிவு செய்துள்ளனர். மிகப்பெரிய பூசணிக்காய் தோட்டத்தில் போட்டோ ஷூட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். Alien Chestbuster திரைப்படத்தில் வரும் ஏலியன் போன்று ஒரு பொம்மையை உருவாக்கி கொடூரமாக ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளனர்.  

கனடாஅந்தப் பூசணித்தோட்டத்தில் டோட் மற்றும் நிக்கோலே சாதாரணமாக இருப்பதுபோன்று சில புகைப்படங்கள் எடுத்துள்ளனர். பின்னர் நிக்கோலேவுக்குப் பிரசவ வலி ஏற்படுவது போன்று சில புகைப்படங்கள் அடுத்த சில படங்களில் அவரது வயிற்றைக் கிழித்துக்கொண்டு ஏலியன் போன்று ஒரு உயிரினம் வெளியேவருகிறது. டோட் மற்றும் நிக்கோலே உடம்புகளில் சிவப்பு கலரில் சாயம் பூசி சற்று கொடூரமாகப் போட்டோ எடுத்திருந்தனர். அந்தத் தோட்டத்தில் அது ஓடுவது போலவும் அதனை டோட் துரத்திச் செல்வது போன்று சிலப் படங்கள். அந்த உயிரினத்தைப் பிடித்துச்செல்லும் டோட் தனது மனைவி நிக்கோலேவிடம் அதைக் கொடுக்கிறார். பிறகு டோட் அதற்குப் பாட்டிலில் பால் ஊற்றுகிறார். இந்தப் புகைப்படங்கள் அனைத்தையும் தனது முகநூலில் டோட் பதிவு செய்துள்ளார். இது முகநூலில் லைக்ஸ் அள்ளியது. 


[X] Close

[X] Close