வெளிநாட்டுக்குச் செல்ல திட்டமா? - சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து பெஸ்ட்!  | switzerland, Singapore are best countries for live and work

வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (12/10/2018)

கடைசி தொடர்பு:15:21 (12/10/2018)

வெளிநாட்டுக்குச் செல்ல திட்டமா? - சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து பெஸ்ட்! 

வெளிநாடு செல்ல திட்டம் வைத்திருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஹெச்.எஸ்.பி.சி வங்கி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எந்த நாட்டில் நல்ல சம்பளமும் ஆரோக்கியமாக வாழ்க்கை முறையும் கிடைக்கிறது என்பதை முன்வைத்து 22,318 பேரிடம்  ஆய்வு நடத்தப்பட்டு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வில் அழகு முகுந்த ஸ்விட்சர்லாந்து நாட்டில்தான் ஊழியர்களுக்கு அதிகளவில் சம்பளம் வழங்கப்படுகிறது எனத் தெரியவந்துள்ளது. பதவி உயர்வு கிடைத்து வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புபவர்கள் ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் நாடுகள்தான் சிறந்தவை என்று பெரும்பாலானோர் பதில் அளித்துள்ளனர். ஹாங்காங், அமெரிக்கா போன்ற நாடுகளில் பதவி உயர்வுடன் செல்வோருக்கு 21,000 அமெரிக்க டாலர்கள் அதிகமாகச் சம்பளம் கிடைக்கிறது. 

சிங்கப்பூர்

ஸ்விட்சர்லாந்தில் சாதாரண ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்குச் சராசரியாக 61,000 அமெரிக்க டாலர்கள் சம்பளமாகக் கிடைக்கிறது. துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் ஆண்டுக்கு 2,03,000 அமெரிக்க டாலர்கள் சம்பளம் அளிக்கப்படுகிறது. இது சர்வதேச அளவைவிட இரு மடங்கு அதிகமாகும். சிங்கப்பூரிலும் ஆண்டுக்கு 1,62,000 அமெரிக்க டாலர்கள் நிபுணர்களுக்குச் சம்பளமாக வழங்கப்படுகிறது. நல்ல வாழ்க்கை முறை, குழந்தைகள் கல்வி, அதிகச் சம்பளம் என்ற அடிப்படையில் சிங்கப்பூர் தொடர்ந்து 4 வது ஆண்டாக இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவுக்குப் பட்டியலில் இரண்டாவது இடம். ஹாங்காங், சீனா, அமீரகம் நாடுகள் அடுத்தடுத்த இடத்தைப் பெறுகின்றன. 

குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள் பட்டியலில் ஸ்வீடன் முதலிடத்தைப் பிடிக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close