``சாகும்வரை அவருடனான நட்பு தொடரும்'' - ஜார்ஜ் புஷ் குறித்து நெகிழும் மிஷெல் ஒபாமா! | i will love him till deat says michelle obama about george bush

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (12/10/2018)

கடைசி தொடர்பு:15:50 (12/10/2018)

``சாகும்வரை அவருடனான நட்பு தொடரும்'' - ஜார்ஜ் புஷ் குறித்து நெகிழும் மிஷெல் ஒபாமா!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் உடனான அவரது நட்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.கடந்த மாதம் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் செனட்டர்.ஜான் மெக்கைன் இறுதி அஞ்சலி நிகழ்வில், ஜார்ஜ் புஷ் அவரின் மனைவிக்கு இருமல் மாத்திரை வழங்கினார், அப்போது அவரிடமிருந்து மிஷெல் ஒபாமா தானும் ஒரு மாத்திரையைக் கேட்டு வாங்கியது இணையத்தில் வரலாகப் பரப்பப்பட்டது.

மிஷேல் ஒபாமா

மிஷெல் ஜனநாயகக் கட்சி சார்பும் புஷ் குடியரசு கட்சி சார்பும் உடையவர்கள் ஆதலால் இவர்கள் நட்பு விநோதமாகப் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து இன்று மிஷெல் ஒபாமாவிடம் கேள்வி கேட்கப்பட்டது,

அப்போது பேசிய அவர், ``பல வருடங்களாக அரசு நிகழ்ச்சிகளில் புஷும் நானும், அரசு நெறிமுறைப்படி எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும் அருகருகே தான் அமரவைக்கப்படுவோம். அதனால் நாங்கள் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம், புஷ் என்னுடைய `பார்ட்னர் இன் க்ரைம்' கட்சி, நிறம், இனம் அனைத்தையும் தாண்டியது எங்களுடைய நட்பு, சாகும்வரை நான் அவர் மீது அன்பு கொண்டிருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இரு வேறு அரசியல் துருவங்களில் இருக்கும் இந்த இருவரின் விநோத நட்பு உலகத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


[X] Close

[X] Close