`சீராக இயங்குவதாக விமானி தெரிவித்தும் விமானம் தரையிறக்கப்பட்டது ஏன்?' ஏர் இந்தியா விளக்கம் | aircraft hits wall at Trichy airport during take-off, unaware pilots continue journey

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (12/10/2018)

கடைசி தொடர்பு:16:15 (12/10/2018)

`சீராக இயங்குவதாக விமானி தெரிவித்தும் விமானம் தரையிறக்கப்பட்டது ஏன்?' ஏர் இந்தியா விளக்கம்

திருச்சியிலிருந்து துபாய் நோக்கி இன்று அதிகாலை 1.30 மணிக்கு 130 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (போயிங் 737) விமானம் வானத்தை நோக்கி எழும்புகையில் விமான நிலையத்தின் சுற்றுச் சுவரை இடித்தது. விமானம் மோதியதில் மதில் சுவர் இடிந்து போனது ஆச்சர்யப்படும்விதத்தில் விமானம் தொடர்ந்து எந்தப் பிரச்னையும் இல்லாமல் பறந்தது. உள்ளே எந்த அதிர்வும் ஏற்படவில்லை. விமானிகளுக்கும் சுவர் மீது மோதியது தெரியவில்லை. 

சுவர் மீது மோதிய விமானம்

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``திருச்சி விமான நிலையத்தில் சுவர் மீது விமானம் இடித்தது குறித்து தரைக்கட்டுப்பாட்டு அலுவலகத்திலிருந்து விமானிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. சீராக இயங்குவதாக விமானி தெரிவித்தார். எனினும், விமானத்தை மும்பை திருப்ப உத்தரவிடப்பட்டது. துபாய் புறப்பட்ட விமானம் அதிகாலை 5.35 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கியது. விமானத்தின் அடிப்பாகத்தில் சிறிதளவு சேதமடைந்துள்ளது. மும்பையிலிருந்து மாற்று விமானம் மூலம் பயணிகள் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமானம் ரன்வேயில் 250 - 290 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. டேக் ஆஃப் செய்த போது விமானத்தின் பின் சக்கரங்கள் தரைக்கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் மீது முதலில் மோதின. தொடர்ந்து பின்பகுதி சுவரின் மீது மோதியுள்ளது. விமானத்தை இயக்கிய விமானியின் பெயர் கேப்டன் டி.கணேஷ் பாபு. போயிங் 737 ரக விமானத்தை 3,600 மணி நேரம் இயக்கிய அனுபவம் பெற்றவர். துணை விமானியான அனுராக், போயிங் 737 ரக விமானத்தை 3,000 மணி நேரம் ஓட்டிய அனுபவம் உள்ளவர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close