``கூகுள் மேப்ஸ்க்கு நன்றி” - மனைவியை விவாகரத்து செய்த கணவரின் வைரல் பதிவு! | Man divorces cheating wife spotted on Google Maps

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (12/10/2018)

கடைசி தொடர்பு:20:40 (12/10/2018)

``கூகுள் மேப்ஸ்க்கு நன்றி” - மனைவியை விவாகரத்து செய்த கணவரின் வைரல் பதிவு!

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் தன் மனைவி இன்னொருவருடன் இருந்ததைக் கூகுள் மேப்ஸ் காட்டிக் கொடுத்ததை அடுத்து அவரை விவகாரத்து செய்துள்ளார். 

கூகுள் மேப்ஸ் படம்

இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளது. அதில், ``பெரு நாட்டின் தலைநகரான லிமாவைச் சேர்ந்த ஒருவர் வழி ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காகத் தனது காரில் கூகுள் மேப்ஸை ஆன் செய்துள்ளார். கூகுள் மேப்ஸ் வழியாகப் பாதையைத் தேடும்போது ஓர் ஆணும் பெண்ணும் பார்க்கில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதையும், அந்தப் பெண் அணிந்திருந்த உடை தனக்குப் பழக்கப்பட்டவர்களின் உடையைப்போல் உள்ளதைக் கண்டுள்ளார். அது தன் மனைவின் உடை என்பதை அறிந்த அவர் அதைப் புகைப்படமாக எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றதும் தன் மனைவியிடம் அந்தப் புகைப்படத்தைக் காட்டி விசாரித்துள்ளார். 

விசாரணை சண்டையாக மாற உண்மையை ஒப்புக்கொண்ட மனைவி தனக்கு இன்னொருவருடன் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஃபேஸ்புக் மூலம் தனக்கு இன்னொருவருடன் தொடர்பு ஏற்பட்டது என்றும், பல ஆண்டுகளாக இருவரும் பழகி வருவதாகவும் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளார் அந்த மனிதர். மேலும், தன் மனைவி வேறு ஒருவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ``மனைவியைக் கண்டுபிடிக்க உதவியதுடன், விவாகரத்து செய்யக் காரணமாக இருந்த கூகுள் மேப்ஸ்க்கு நன்றி'' எனத் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close