‘கிளீன் அண்ட் கிரீன் பாகிஸ்தான்’ - மோடியைப் பின்பற்றும் இம்ரான் கான் | PM Imran inaugurates Clean and Green Pakistan campaign

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (14/10/2018)

கடைசி தொடர்பு:12:15 (14/10/2018)

‘கிளீன் அண்ட் கிரீன் பாகிஸ்தான்’ - மோடியைப் பின்பற்றும் இம்ரான் கான்

தூய்மை மற்றும் பசுமை பாகிஸ்தான் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான். 

இம்ரான் கான்

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கும் போது தூய்மை இந்தியா என்ற திட்டத்தை தொடங்கி அதன் மூலம் அனைத்து அமைச்சர்கள் உள்படப் பல பிரபலங்களும் பல இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொண்டு தூய்மை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

இதே வகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தூய்மை திட்டத்தை செயல்படுத்தும் என்று பாராளுமன்ற தேர்தலில் போது வாக்குறுதி அளித்திருந்தார். அதன் படி நேற்று இஸ்லாபாத்த்தில் உள்ள ஒரு கல்லூரியில் தூய்மை மற்றும் பசுமை பாகிஸ்தான் (Clean and Green Pakistan) என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். தானே  துடைப்பத்துடன் களத்தில் இறங்கி தூய்மை செய்து ஒரு மரக்கன்றை நட்டார். மேலும் பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களிலும் இந்தத் தூய்மை திட்டம் நேற்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த விழாவில் பேசிய பிரதமர் இம்ரான் கான், “ உலக வெப்பமயமாதலினால் அதிகம் பாதிக்கக்கூடிய நாடுகளில் 7-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. நிலத்தடி நீரை மீட்டெடுப்பதற்காகவும் வெள்ளம் நீர் தடுப்பு சிறந்த மேலாண்மை போன்றவற்றுக்காக ‘ரீசார்ஜ் பாகிஸ்தான்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் ஐரோப்பாவை விடத் தூய்மையில் சிறந்த நாடாக பாகிஸ்தான் விளங்கும். இதை தொடர்ந்து செயல்படுத்த நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். தூய்மையான பாகிஸ்தானை அடுத்த தலைமுறையினரிடம் நாம் ஒப்படைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.