வெளியிடப்பட்ட நேரம்: 05:58 (16/10/2018)

கடைசி தொடர்பு:08:21 (16/10/2018)

மைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார்! #PaulAllen

உலகளவில் 46-வது பெரிய கோடீஸ்வரராக அறியப்படும் இவர், 20.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளை வைத்திருக்கிறார்.

தொழில்நுட்ப வல்லுநரும், மைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரும், வல்கனின் நிறுவனரான பால் ஆலன், லிம்போமா எனும் ரத்தப் புற்றுநோயால் காலமானார். அவரின் வயது 65. இவரின் மறைவு தொடர்பாக, அவரது தங்கை ஜோடி வெளியிட்ட அறிக்கையில், 'தொழில்நுட்ப வல்லுநர், நன்கொடையாளர் என்பதைத் தாண்டி, எனக்கு அவர் நல்ல நண்பனாகவும், அண்ணனாகவும் இருந்தார். பால் ஆலனை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் அவரது நண்பர்களுக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனப் பேசியுள்ளார்.

யார் இந்த Paul Allen?

 

பால் ஆலன்

 

கடந்த 1975-ம் ஆண்டில், பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன் இருவரும் இணைந்து துவக்கியதுதான் மைக்ரோசாஃப்ட். உலகளவில் 46-வது பெரிய கோடீஸ்வரராக அறியப்படும் இவர், 20.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளை வைத்திருக்கிறார். தொழில்நுட்பத் துறையைத் தாண்டி, பால் ஆலனை ஈர்த்திருக்கும் மற்றொரு விஷயம், ஸ்போர்ட்ஸ். ஆம், நேஷனல் கால்பந்து லீக்கைச் சேர்ந்த Seattle Seahawks மற்றும் நேஷனல் கூடைப்பந்து அமைப்பைச் சேர்ந்த Portland Trailblazers அணிகளின் உரிமையாளர் இவர்தான்!

 

சத்ய நாதெள்ளா சொல்லியிருப்பது இதுதான்!

 

சத்ய நாதெள்ளா

 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெள்ளா வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், 'மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கும், தொழில்துறைக்கும் அவரின் பங்களிப்பு அளப்பரியது. தொடர்ந்து அமைதியாக பணிபுரிந்தாலும், தொழில்நுட்பத்தில் பல உயரங்களை அவர் தொட்டிருக்கிறார். ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம், தனது எல்லைகளை விரிவாக்கும் திறன் ஆகியவற்றைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். என்னைப் போலவே, மைக்ரோசாஃப்ட்டில் இருக்கும் அனைவரையும் அவர் தன்வசம் ஈர்த்திருந்தார். Rest in Peace' எனக் கூறியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க