வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (17/10/2018)

கடைசி தொடர்பு:13:20 (17/10/2018)

அமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ! - வரலாற்றை மாற்றிய இரும்புப் பெண்மணி லாரா

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் கமாண்டோ அமெரிக்க ராணுவத்தை வழிநடத்தப் போகிறார்.

லாரா
 

லெப்டினென்ட் ஜெனரல் லாரா ஜெ. ரிச்சர்ட்சன் ( Lt. Gen. Laura Richardson) அமெரிக்க ராணுவத்தில் 1986-ம் ஆண்டு இணைந்தார். 2012-ம் ஆண்டு அமெரிக்காவின் முதன்மை அணி என்று அழைக்கப்படும் `1st Cavalry Division’-ல்  முதல் பெண் துணை தளபதியாகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு தற்போது அமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் தளபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.

லாரா
 

அமெரிக்க ராணுவத்தை `போர்ஸ்காம்’ (FORSCOM) என்று குறிப்பிடுவார்கள். மிகப்பெரிய ராணுவப்படையாகக் கருதப்படும் போர்ஸ்காமில் 7,76,000 ராணுவ வீரர்களும், 96,000 பிற அதிகாரிகளும் இடம்பெற்றிருப்பார்கள். இந்தப் பிரமாண்ட அணியை வழிநடத்தும் கமாண்டோ ஜெனரல் பொறுப்பில் இருந்த ஜெனரல் ராபர்ட் பி. ஆப்ராம்ஸ் அவரின் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். எனவே, அவருக்கு அடுத்த இடத்தில் துணைத் தளபதியாக இருக்கும் லாரா ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்பார். இதற்கான அறிவிப்பை வடக்கு கரோலினாவில் உள்ள போர்ஸ்காம் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. `இந்த உயரத்தை அடைவது சுலபமான ஒன்றல்ல. லாரா என்ற இரும்புப் பெண்மணியால் மட்டுமே இந்த உயரத்தை அடைய முடியும்’ என்று சக ராணுவ அதிகாரிகள் லாராவைப் புகழ்ந்து வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க