`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை!’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி | american lottery jackpot reaches record high of 1.6 billion dollars

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (20/10/2018)

கடைசி தொடர்பு:19:40 (20/10/2018)

`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை!’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி

அமெரிக்காவில் பிரபலமான லாட்டரி விளையாட்டு மெகா மில்லியன்ஸ். அமெரிக்காவின் 44 மாகாணங்கள் இந்த விளையாட்டில் பங்கு பெறுகின்றன. ஒரு டாலரிலிருந்து, மூன்று டாலர் வரை டிக்கெட் விலை விற்கிறது. எவ்வளவு டாலர்களுக்கு லாட்டரிகள் விற்கப்படுகின்றனவோ, அதில் பெரும் பங்கு வெற்றியாளருக்கு வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஜாக்பாட் எண் யாரிடமும் இல்லை என்றால், அந்தப் பரிசுத் தொகை சேர்ந்து, அடுத்த வாரம் ஜாக்பாட் பரிசாக அறிவிக்கப்படும்.

லாட்டரி

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வெற்றியாளர்களே இல்லாத நிலையில், இந்த வாரம் வெற்றிபெறுபவரின் பரிசுத் தொகை 1 .6 பில்லியின் டாலராக உயர்ந்திருக்கிறது. அதாவது, ஏறத்தாழ பத்தாயிரம் கோடி. இம்முறை வெற்றிபெறுபவர், உலகின் பிரபலங்கள் பலரை விட அதிக பணக்காரர் ஆகிவிடுவார். இதுவரை இந்த விளையாட்டில், வரலாற்றிலேயே இந்த அளவுக்கு பரிசுத் தொகை அதிகரித்ததில்லை என்கின்றனர். இதனால், அமெரிக்கா முழுவதும் இந்த வெற்றியாளருக்காகக் காத்திருக்கிறது. இந்நிலையில், பெரும் பிரபலங்கள்கூட அதிக விலை கொடுத்து இந்த வார டிக்கெட்டுகளை வாங்கிவருகின்றனர். 

பிரபல குத்துச்சண்டை வீரர் ஃபிலாய்ட் மேவெதர் (Floyd Mayweather) சமீபத்தில் இரண்டாயிரம் டாலர் செலவழித்து இதற்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அமெரிக்காவே எதிர்பார்க்கும் இந்த லாட்டரி வெற்றியாளர் தேர்ந்தெடுப்பு, வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும்.