வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (22/10/2018)

கடைசி தொடர்பு:18:45 (22/10/2018)

துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால்! - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் சென்ற சவுதி அதிகாரிகள்

ஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தில் செய்தியாளர் ஜமால் கஷோகியின் உடல் துண்டாக்கப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டு உடல் பாகங்கள் வீசப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

செய்தியாளர் ஜமால் கொலை

வாஷிங்டன் போஸ்ட் , நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு செய்தியாளராகப் பணியாற்றிய ஜமால் கஷோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் பல அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளன. சவுதி அரசையும் இளவரசர் முகமது பின் சல்மானையும் தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்த ஜமாலை தீர்த்துக்கட்ட சவுதி அரசு திட்டமிட்டு இயங்கியுள்ளது. துருக்கியைச் சேர்ந்த பெண் ஹெயிஸ் செங்குஸ் உடன் ஜமாலுக்கு காதல் இருந்தது. ஹெயிஸ் செங்குஸை திருமணம் செய்ய ஜமால் முடிவு செய்தார். தொடர்ந்து துருக்கி நாட்டுக்கு வந்த, ஜமால் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு விவகாரத்து வாங்கியது தொடர்பான ஆவணங்களைப் பெற வந்தார். 
செப்டம்பர் 28-ம் தேதி சவுதி தூதரகத்துக்குச் சென்றார். அவரை அக்டோபர் 2-ம் தேதி மீண்டும் வரும்படி அங்கிருந்தவர்கள் திருப்பி அனுப்பினர். இரண்டாவது நாள் சவுதி தூதரகத்துக்குள் சென்றவர் மீண்டும் திரும்பவே இல்லை. ஜமால் கஷோகி காணாமல்போன விவகாரம் சர்வதேச நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சவுதி அரசை அமெரிக்கா எச்சரிக்கையும் செய்தது. எனினும் பலன் இல்லை. இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தின் உள்ளேயே ஜமால் கதை முடிக்கப்பட்டுள்ளது. இவரை கொல்வதற்காக ரியாத்திலிருந்து 15 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் இஸ்தான்புல்லுக்குச் சென்றுள்ளது. 

இஸ்தான்புல் விமான நிலையத்தில் அந்த டீம் வந்திறங்கிய புகைப்படங்களும் தற்போது கிடைத்துள்ளன. தங்கியிருந்த ஹோட்டலிலும் இவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சவுதி ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பாகச் செல்பவர்கள். ஜமாலை கொல்ல இஸ்தான்புல் நகருக்கு வந்தவர்களில் ஜெனரல் மஹெர் அப்துல்லாஸிஸ் என்பவரும் ஒருவர். இவர், சவுதி இளவரசர் பாரீஸ், மாட்ரிட், பாஸ்டன், ஹூஸ்டன் சுற்றுப்பயணத்தின்போது உடன் சென்றவர். இன்னொருவர் சலா அல் துபாஜி. இவர் உடற்கூறு ஆய்வு நிபுணர்.கொலை நடந்த அடையாளங்களை அழிப்பதிலும் சலா ஸ்பெஷலிஸ்ட். ஜமாலை சித்ரவதைச் செய்து கொன்ற பின்னர், உடற்கூறு ஆய்வு நிபுணரான சலா, அவரின் உடலை பல பகுதிகளாக வெட்டியுள்ளார். பின்னர், உடல்பாகங்களை சூட்கேஸில் வைத்து அடைத்து காரில் கொண்டு சென்று காட்டுப் பகுதியில் வீசியுள்ளனர். உடல் பாகங்களைத் துருக்கிப் போலீஸார் தேடி வருகின்றர். 

வெளிநாட்டுத் தூதரகத்துக்குள் வைத்து செய்தியாளர் கொல்லப்பட்ட விவகாரம் அரசியல்ரீதியாக அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க