அமெரிக்காவில் தெலுங்குக்கு முதலிடம் - ஆய்வில் தகவல் | Telugu is the fastest growing language in the US

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (23/10/2018)

கடைசி தொடர்பு:08:30 (23/10/2018)

அமெரிக்காவில் தெலுங்குக்கு முதலிடம் - ஆய்வில் தகவல்

அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசுவோரின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Think tank என்ற அமைப்பு இது தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது.

தெலுங்கு

அதில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தெலுங்கு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 86 சதவிகிதம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளன வீடியோ ஒன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் இருந்து அதிக அளவிலான பொறியாளர்கள் பணிபுரிய அமெரிக்காவுக்கு இடம்பெயர்வதே இந்த வளர்ச்சிக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், சமீப காலமாகத் தொழில்நுட்பம் சார்ந்து படிக்கவும் பல மாணவர்கள் அமெரிக்காவுக்குச் செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். கடந்த வருடக் கணக்கின்படி சுமார் நான்கு லட்சம் தெலுங்கு பேசக்கூடிய மக்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். 2010-ம் ஆண்டுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இது இரு மடங்காகும். இது மட்டுமின்றி வேகமாக வளர்ந்து வரும் முதல் பத்து மொழிகளில் ஏழு மொழிகள் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.