வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (24/10/2018)

கடைசி தொடர்பு:12:20 (24/10/2018)

மோடிக்கு 2018 அமைதிக்கான விருது அறிவித்த தென்கொரியா! - பின்னணியில் 3 காரணங்கள்

ஒரு குட் நியூஸ்...நம் நாட்டின் பிரதமருக்கு இன்னொரு நாடு அமைதிக்கான விருதை அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது.

மோடி
 

2014-ம் ஆண்டு, மே 26-ல் இந்தியாவின் பிரதமராக `நரேந்திர மோடி' பதவியேற்றது நம் அனைவருக்கும் நினைவிருக்கும். பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து தற்போதுவரை இவரின் வெளிநாட்டுப் பயணங்கள் முடியவே இல்லை. நாட்டு மக்களின் நலனுக்காக சமூகப் பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்திய அதே சமயத்தில் சர்வதேச நாடுகளுடனான உறவையும் மேம்படுத்தி வருகிறார். நேபாளம், ஆஸ்திரேலியா, ஃபிஜி உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளாகும். அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களும், சர்வதேச அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளில் அவரின் தலையீடும் மற்ற நாட்டு மக்களின் மனதில் அவரின் பிம்பத்தை ஆழமாகப் பதியச் செய்தது. அதன் விளைவாகத் தென் கொரியாவின் அமைதிக்கான விருதையும் பெற்றுத் தந்துள்ளது. ஆம், பிரதமர் மோடிக்கு 2018-ம் ஆண்டுக்கான சீயோல் அமைதி விருதைப் பெறுகிறார்.

மோடி
 
 

சியோல் அமைதிக்கான விருது ( Seoul Peace Prize)

தென்கொரியா அரசின் சார்பாக சர்வதேச அளவில் பங்களித்த ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சியோல் அமைதிக்கான விருது வழங்கப்படுகிறது. 1990-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது தேர்வுக் குழுவில் 300 கொரிய பிரஜைகளும், 800 சர்வதேச வல்லுநர்களும் இடம்பெற்றிருப்பார்கள். இதுவரை, ஐ.நா-வின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான், பான் கி மூன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் போன்ற சர்வதேச தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வரிசையில் பிரதமர் மோடிக்கும் சியோல் அமைதிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மோடி
 

விருதுக்கான காரணங்கள்..!

உலக அமைதிக்காகப் பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்பு, `Modinomics' என்னும் பெயரில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும் மோடி பங்காற்றியது, இந்தியாவில் மனித மேம்பாடு மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். உண்மையில் இது இந்தியர்களுக்கு நல்ல சேதிதானே? உங்களின் கருத்தை இங்கே பதிவு செய்யவும்..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க