வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (24/10/2018)

கடைசி தொடர்பு:15:45 (24/10/2018)

இந்தியா சிலை செய்கிறது, சீனா நிலவு செய்கிறது... எது மக்களுக்கான தேசம்?

செயற்கை நிலவுகளை விண்ணில் ஏவ சீனா திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் சீனா அபார முன்னேற்றம் அடைந்துள்ளது. ஹாங்காங் நகரைச் சீனாவுடன் இணைத்து 55 கி.மீ தொலைவுக்குக் கடல் பாலத்தைக் கட்டி அசத்தியுள்ள இந்தக் கம்யூனிஸ்ட் நாட்டின் அடுத்த இலக்கு செயற்கை நிலவுகளை விண்ணில் செலுத்துவது. சீனாவின் சில நகரங்களுக்கு இரவு நேரத்தில் மின்விளக்குகளுக்குப் பதிலாக செயற்கை நிலவுகள்தான் வெளிச்சம் தரப்போகின்றன. இதன்மூலம் பெருமளவு மின்சாரச் செலவு குறையும் என்று சீனா நம்புகிறது.

செயற்கை நிலவு

சீனாவின் ஷிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவும் மையத்திலிருந்து 2020-ம் ஆண்டு முதல் செயற்கை நிலா விண்ணுக்கு அனுப்பப்படும். இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மேலும் 3 நிலவுகள் விண்ணுக்கு ஏவப்படும். இரவு நேரத்தில் நிலவுடன் இணைந்து இவை வெளிச்சம் தரும். நிஜ நிலவைவிட 8 மடங்கு அதிகமான வெளிச்சம் இதன் வழியாகக் கிடைக்கும்.

செயற்கை நிலவு திட்டம் வெற்றி பெற்றால் படிப்படியாகத் தெருவிளக்குகள் அகற்றப்படும் ஷிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்குடுவில் முதன்முறையாகச் செயற்கை நிலவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. செயற்கை நிலவு 10 முதல் 80 கிலோமீட்டர் தொலைவுக்கு வெளிச்சம் தரும். புவி வட்டப்பாதையில் 311 கிலோ மீட்டர் தொலைவில் செயற்கைக் கோள் நிலை நிறுத்தப்படும். தேவைப்பட்டால் செயற்கை நிலவை அணைத்து வைத்தும் விடலாம். 

இந்தியாவில் ரூ. 3,000 கோடியில் வல்லபாய் படேலுக்கும் ரூ. 3,600 கோடி செலவில் வீர சிவாஜிக்கும் சிலை அமைக்கப்படுகிறது.  இத்தனைக்கும் சீனாவைவிட எல்லாவிதத்திலும் பின்தங்கிய நாட்டில் மக்கள் பணத்தை இப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள். ஆனால், சீனாவோ பல லட்சம் கோடி செலவு செய்து உலகின் அதிக தொலைவு கொண்ட 55 கிலோ மீட்டர் பாலத்தைக் கட்டி உலக நாடுகளை பிரமிக்க வைத்துள்ளது. செயற்கை நிலவுத் திட்டமும் வெற்றி பெற்றால் சீனாவின் அறிவியல் வளர்ச்சியில் மற்றொரு மைல்கல். 

இந்தியாவா... சீனாவா... எது மக்களுக்கான தேசம்? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க