வெளியிடப்பட்ட நேரம்: 20:56 (24/10/2018)

கடைசி தொடர்பு:20:56 (24/10/2018)

முன்னாள் அதிபர்கள் வீட்டில் வெடிகுண்டு - பதற்றத்தில் அமெரிக்கா!

அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பாரக் ஒபாமா மற்றும் பில் கிளின்டன் வீடுகள் அருகே வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பில் கிளிண்டன் - பாரக் ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் அவரின் மனைவி ஹிலாரி கிளின்டனுடன் நியூயார்க் வடக்குப் பகுதியில் உள்ள சாபாக் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் இன்று மதியம் வெடிகுண்டு கைப்பற்றுள்ளதாக எஃப்பிஐ தெரிவித்துள்ளது. மேலும் வெடிகுண்டைச் செயலிழக்க வைக்க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் எஃப்பிஐ தெரிவித்துள்ளது. எனினும், பில் கிளின்டனும் ஹிலாரியும் வீட்டில் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா வீட்டுக்கு வெடி குண்டு பார்சல்களையும் எஃப்பிஐ கைப்பற்றியுள்ளது

இரண்டு இடங்களிலும் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் மிகவும் சக்திவாய்ந்தவை எனவும், இதை அனுப்பியுள்ளவர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மிகுந்த பகுதியில் அதுவும் முன்னாள் அதிபர்கள் இருவர் வீட்டில் ஒரே நேரத்தில் வெடி குண்டு கண்டுபிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. வெடி குண்டு அனுப்பியவர்களுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க