வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (26/10/2018)

கடைசி தொடர்பு:16:40 (26/10/2018)

14 குழந்தைகளுக்குக் கத்திக் குத்து! - சீனா விளையாட்டுப் பூங்காவில் நடந்த பயங்கரம் #Shocking

சீனாவில் ஒரு பூங்காவில் இருந்த 14 குழந்தைகளை ஒரு பெண் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள்

மேற்கு சீனாவின் சோங்கிங் (Chongqing) மாகாணத்தில் உள்ள ஒரு குழந்தைகள் விளையாட்டுப் பூங்காவில் இன்று 9:30 மணியளவில் பல சிறுவர்கள் தங்களின் காலை நேர உடற்பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தனர். பூங்கா வாசலில் நின்றுகொண்டிருந்த 14 சிறுவர்களை அங்கு வந்த ஒரு பெண் சமையலுக்குப் பயன்படுத்தும் கத்தி மூலம் குத்தியுள்ளார். சம்பவத்தைக் கண்ட குழந்தைகளின் பெற்றோர், பூங்கா காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சேர்ந்து அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கி  குழந்தைகளை மீட்டுள்ளனர். 

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் அந்தப் பெண்ணைக் கைது செய்து, காயமடைந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  காலையிலேயே நடந்த இந்தத் தாக்குதல் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு நடந்த காவல்துறை விசாரணையில், 39 வயதான அந்தப் பெண் லியூ என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தைகளை எதற்காகத் தாக்கினார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை