வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (28/10/2018)

கடைசி தொடர்பு:11:23 (28/10/2018)

`ஓ இது தான் கேட்வாக்கா?’ - பேஷன் ஷோவில் கவனத்தை ஈர்த்த பூனை!

துருக்கியில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பூனை ஒன்று அழையா விருந்தாளி போல, மாடல்கள் நடுவே நின்று கொண்டிருந்ததை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.

கேட் வாக்


`கேட் வாக்’ என்ற நடைக்கு புதிய அர்த்தத்தைக் கொடுத்துள்ளது துருக்கியில் நடந்த ஃபேஷன் ஷோ. துருக்கியில் உள்ள இஸ்தான்பூர் நகரில் `எஸ்மோத் இன்டர்நேஷனல் ஃபேஷன் ஷோ’ நடைபெற்றது. இதில் வண்ண வண்ண ஆடைகளையும், புது ரக ஆடைகளையும் அணிந்து மாடல்கள் வலம் வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு இடையே பூனை ஒன்று அழையா விருந்தாளியாக மாடல்கள் நடக்கும் மேடையில் வந்து அமர்ந்துகொண்டது. புதுவடிவ ஆடைகளுடன் அவர்கள் நடந்துவரும் போது, இந்த பூனையும் நடந்து வந்தது. அது மட்டுமின்றி அந்த மேடையில் வலம் வந்த மாடல்களையும் அது விட்டுவைக்கவில்லை. அவர்களின் கால்களை சீண்டியபடி இருந்தது.

ஆடைகளை அணிந்து வந்தவர்களை மாடல்களின் மேலிருந்த பார்வையாளர்களின் கவனத்தை நொடி நேரத்தில் பூனை ஈர்த்துக்கொண்டது. மேலும் அங்கிருந்தவர்கள் இது தான் `கேட் வாக்கா’ என முணுமுணுத்துக்கொண்டனர். முன்னதாக அமைதியாக வந்து மேடையில் அமர்ந்த பூனையை யாரும் கண்டுகொள்ளாததால், அது சுட்டித்தனத்தை ஆரம்பித்தது. அனைவரும் இந்த காட்சியை ரசித்த படி கண்டுகளித்தனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ahahahahahah #catwalk #real #vakkoesmod

A post shared by H (@hknylcn) on