வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (28/10/2018)

கடைசி தொடர்பு:17:20 (28/10/2018)

இந்தியாவின் அழைப்பை நிராகரித்த அமெரிக்கா! - ஒபாமா செய்ததை ட்ரம்ப் செய்யாதது ஏன்?

அமெரிக்க அதிபர் டோனால்டு ட்ரம்ப் இந்திய அரசின் குடியரசு தின அழைப்பை நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகார்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் தற்போதைய சூழல் ட்ரம்ப் இந்தியா வர வாய்ப்பில்லை என்பதை உணர்த்துகிறது.

ட்ரம்ப்
 

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் வெளிநாட்டுத் தலைவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு (2018) குடியரசு தின விழாவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ (ASEAN) அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 2019-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் பங்குபெற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஏப்ரல் மாதம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வெள்ளை மாளிகையின் ஊடகத்துறை செயலாளர் சாரா சாண்டர்ஸ் ஒரு பேட்டியின்போது கூறியிருந்தார். இந்தியாவின் அழைப்பை ட்ரம்ப் ஏற்றாரா இல்லையா என்பது பற்றி இந்திய வெளியுறவு அமைச்சம் சார்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.  

ஒபாமா
 

அமெரிக்காவில் ஒவ்வொரு ஜனவரி மாதமும் அதிபர் கலந்து கொள்ளும்   State of the Union address என்னும் கூட்டம் நடைபெறுமாம். இதனைக் காரணம் காட்டி ட்ரம்ப் இந்தியா வருவது சந்தேகம்தான் என்று அமெரிக்க அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையான காரணம் இதுகிடையாது என்கின்றனர் சர்வதேச அரசியல் விமர்சகர்கள். 

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கு இடையேயான உறவில் விரிசல் விழுந்துவிட்டதாம். இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று ட்ரம்ப் எச்சரித்தும் இந்தியா தொடர்ந்து ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இந்தியா ரஷ்யாவுடன் ஏவுகணை  ஒப்பந்தம் செய்யக்கூடாது என்பது அமெரிக்காவின் விருப்பம்.  ஆனால் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் நம் பிரதமர் மோடி ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக அதிநவீன ஏவுகணையை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த இரண்டு காரணங்களாலும் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் அளவுக்கு அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளதாம். ட்ரம்ப் இந்திய அரசின் அழைப்பை நிராகரித்ததற்கு இதுதான் காரணம் என்று ஆங்கில ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன. 

ஒபாமா
 

இந்த சமயத்தில் ஒரு சம்பவத்தை நினைவுகூர  வேண்டும் . இதற்கு முன் ஒருமுறை இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ஜனவரி மாதத்தில் நடக்கும்   State of the Union address கூட்டத்தையே தள்ளி வைத்தார். ஆனால் இப்போதோ, அந்தக் கூட்டத்தை காரணம் காட்டி ட்ரம்ப் இந்திய வர மறுக்கிறார்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க