வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (30/10/2018)

கடைசி தொடர்பு:07:38 (30/10/2018)

இலங்கை துப்பாக்கிச் சூடு சம்பவம் - அர்ஜுனா ரணதுங்க ஜாமீனில் விடுதலை...!

லங்கையில் கடந்த சில தினங்களாக அரசியலில் அதிரடியான பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளரான பெட்ரோலிய மற்றும் வனத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜுனா ரணதுங்க, தன்னுடைய அலுவலகத்தில் உள்ள முக்கியமான கோப்புகளை எடுக்க பாதுகாவலருடன் சென்றார். அப்போது  அலுவலர்கள் கோப்புகளை எடுக்க அவரை அனுமதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் அர்ஜூனா ரணதுங்கவின் பாதுகாவலர்கள் அலுவலர்களைத் துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இருவர் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடி வருகின்றனர்.

அர்ஜுனா ரணதுங்க
 

பெட்ரோலிய அமைச்சகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதற்குக் காரணமாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கவை இலங்கை போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சரின் சார்பாக ஜாமீன் வேண்டி கொழும்பு நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி 5 லட்சம் ரூபாய் ஜாமீனில்   விடுதலை செய்துள்ளார்.