வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (30/10/2018)

கடைசி தொடர்பு:16:09 (30/10/2018)

ரெட் ஹேட் நிறுவனத்தை ஐ.பி.எம் வாங்கியது ஏன்..? #IBM

ஐ.பி.எம் நிறுவனம் அமேசான் நிறுவனத்தின் போட்டி நிறுவனமாக இருந்தாலும் இந்த இணைப்புக்கு அடுத்து அமேசானுடன் இணைந்து பணியாற்றவே அது விரும்புகிறது.

சென்ற வாரக் கடைசியில் வந்த வதந்திகளை உறுதிப்படுத்தும்விதமாக, ஐ.பி.எம் (IBM) நிறுவனம், ரெட் ஹேட் க்ளவுட் சாஃப்ட்வேர் பிசினஸ் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. ரெட் ஹேட் என்பது, ஓப்பன் சோர்ஸ் க்ளவுட் சாஃப்ட்வேர். இதை ஒரு பங்குக்கு 190 டாலர்கள் வீதம் 34 பில்லியனுக்கு ஐ.பி.எம் நிறுவனம் வாங்கியுள்ளது என்பதை ஐ.பி.எம் மற்றும் ரெட் ஹேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இறுதிக்கட்டப் பரிசீலனைகள் முடிந்த பிறகு, 2019-ம் ஆண்டின் பிற்பாதியில் இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இது சாஃப்ட்வேர் துறையில் நடந்திருக்கும் மிகப்பெரிய இணைப்பாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, டெல் நிறுவனம் ஈ.எம்.சி-யை 67 பில்லியனுக்கு வாங்கியதுதான் சாஃப்ட்வேர் துறையில் நடந்த மிகப்பெரிய இணைப்பாக இருந்தது.

#IBM

ஐ.பி.எம் நிறுவனம், `லெகசி' என்ற சர்வரை நம்பியே செயல்பட்டுவந்தது. இப்போது க்ளவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருப்பது சாஃப்ட்வேர் துறையில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக, சென்ற ஆண்டு மே மாதத்திலிருந்தே இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயலாற்றிவந்தன. ஹை பிரீடு க்ளவுட் குழு, ஏற்கெனவே ஐ.பி.எம் நிறுவனத்துடன் இணைந்துதான் இருக்கிறது. இதன் மதிப்பு 19 பில்லியன் டாலர். இனி இந்தக் குழுவின் அங்கமாக ரெட் ஹேட் நிறுவனமும் செயல்பட்டு, ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் தயாரிப்பில் ஈடுபடவுள்ளது. 

ரெட் ஹேட் - ஐ.பி.எம்

ஐ.பி.எம்-ன் சி.இ.ஓ-வும் தலைவருமான ஜின்னி ரோமெட்டி பேசும்போது ``இது, மிகப்பெரிய ஒரு மாற்றத்துக்கு வழிவகுக்கும். இனி க்ளவுட் துறையில் குறிப்பிடத்தக்கப் பல்வேறு மாற்றங்கள் நிகழ இது ஒரு முக்கியமான முன்னெடுப்பாக இருக்கும். உலகின் மிகப்பெரிய க்ளவுட் சந்தையில் ஐ.பி.எம் இனி முன்னணி இடம் வகிக்கும். க்ளவுட் சாஃப்ட்வேரை தங்கள் தொழிலுக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் நிறுவனங்களுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பு" என்று கூறியுள்ளார்.

லினக்ஸ், கன்டெயினர்ஸ், கூபர்நெட்டிஸ், மல்ட்டி க்ளவுட் மேனேஜ்மென்ட், ஆட்டோமேட்டிக் க்ளவுட் சர்வீஸஸ் போன்றவை இந்த இணைப்பால் இனி சாத்தியமாகும் என்றும், இந்த இணைப்புக்குப் பிறகு இதில் ஏ.டபிள்யூ.எஸ்., அசூர், கூகுள் க்ளவுட், அலிபாபா போன்ற முன்னணி நிறுவனங்கள் உட்பட இன்னும் பலவிதமான க்ளவுட் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் ஐ.பி.எம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜின்னி -ஐ.பி.எம்அமேசான் போன்ற நிறுவனங்கள் க்ளவுடை பெருமளவில் பயன்படுத்துகின்றன. இன்னும் பல நிறுவனங்களும் க்ளவுடை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. ஆனாலும் ``தற்போது க்ளவுடைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், 20 சதவிகித வேலையைத்தான் க்ளவுட் சாஃப்டேவேர் மூலம் செய்கின்றன. இன்னும் இருக்கும் 80 சதவிகித வேலைகளையும் க்ளவுட் சார்ந்து செயல்படுத்துவதுதான் தொழில் மற்றும் வளர்ச்சி சார்ந்ததாக இருக்க முடியும். எனவே, எங்களின் அடுத்த நகர்வு அதை நோக்கியதாகத்தான் இருக்கும்.  தொழில்சார்ந்த ஆப்ஸை ஹை பிரீடு க்ளவுடில் ஏற்றுவது, இன்னும் பல டேட்டாக்களை டவுன்லோடு செய்வது போன்றவையும் இந்த முயற்சியில் அடங்கும். இதில் விற்பனை செய்வது முதல் வாங்குதல் வரை எல்லாவிதமான செயல்பாடுகளும் உண்டு" என்கிறார் ஜின்னி.

``ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் என்பது, தற்காலத்திய தகவல் தொழில்நுட்பத் தேவைகளுக்கான தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. ரெட்ஐ.பி.எம் - கிருஷ்ணா அரவிந்த் ஹேட்டால் இது சாத்தியமாகியுள்ளது என்பது எனக்குப் பெருமைதான்" என்கிறார் ரெட் ஹேட்டின் நிறுவனர் ஜிம் வைட்ஹர்ஸ்ட்.

மேலும், ``ஐ.பி.எம் நிறுவனத்தோடு இணைவது இன்னும் பெரிய இடத்துக்கு எங்களைக் கொண்டுசெல்லும். இதில் பல ஆதாயங்கள் உண்டு. அதை வைத்து நாங்கள் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேரை இன்னும் பெரிய தளத்துக்குக் கொண்டு செல்ல முடியும். ரெட் ஹேட்டை ஒரு பெரிய சந்தையில் அறிமுகப்படுத்த முடியும். அதேசமயம் எங்களுடைய தனித்த அடையாளமான ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் தொடர்பான எங்கள் நம்பிக்கைகளையும் எங்களால் காப்பாற்றிக்கொள்ள முடியும்" என்கிறார்.

ஐ.பி.எம் நிறுவனம் அமேசான் நிறுவனத்தின் போட்டி நிறுவனமாக இருந்தாலும், இந்த இணைப்புக்கு அடுத்து அமேசானுடன் இணைந்து பணியாற்றவே அது விரும்புகிறது. ``பல க்ளவுடுகளை இணைத்து சேவைபுரியும் ஒரு நிறுவனமாக இருக்கவே விரும்புகிறோம். அதில் ரெட் ஹேட்டையும் எல்லா நிலைகளிலும் இணைக்க விரும்புகிறோம்" என்கிறார் ஐ.பி.எம் ஹை பிரீடு க்ளவுட் குழுவின் தலைவர் அரவிந்த் கிருஷ்ணா. ``இதைச் செய்வதன்மூலம் எங்கே ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் இயங்கினாலும் ஐ.பி.எம்-ஆல் அதற்கு உதவ முடியும். அதனால் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் வர்த்தகரீதியாக உலக அளவில் மேம்படும்" என்கிறார்.

வாங்கி ஒரு வருடத்துக்குள்ளேயே தங்களது வளர்ச்சி, மார்ஜின் தொகை, பணப்பரிமாற்றம் எல்லாவற்றையும் ரெட் ஹேட் நிறுவனம் உயர்த்தும் என ஐ.பி.எம் நிறுவனம் நம்புகிறது.


டிரெண்டிங் @ விகடன்