எவ்வளவு எரித்தாலும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறாது! - புதிய எரிபொருள் | This Spanish company found produce a fuel that emits no CO2

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (30/10/2018)

கடைசி தொடர்பு:22:30 (30/10/2018)

எவ்வளவு எரித்தாலும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறாது! - புதிய எரிபொருள்

இந்த எரிபொருளை எரிக்கும்போது வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு, நிலக்கரியை எரிக்கும்போது உருவாக்கும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவை விடக் குறைவு. இவர்கள் உருவாக்கியிருக்கும் பயோகார்பன் எரிபொருளை எரிக்கும்போது கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுவதே இல்லை.

எரிபொருள்

 ஸ்பானிஷ் நிறுவனமான இன்கெலியா (Ingelia) இயற்கைக் கழிவுகளிலிருந்து எரிபொருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளது. இதற்காக, ஹைட்ரோதெர்மல் கார்பனாக்கம் (hydrothermal carbonisation) எனும் தொழில் துறை செயல்முறையை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், பயோகார்பனை உருவாக்குகின்றனர். இன்கெலியா நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த எரிபொருளை எரிக்கும்போது வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு சாதாரணமாக நிலக்கரியை எரிக்கும்போது உருவாகும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவை விடக் குறைவு. இவர்கள் உருவாக்கியிருக்கும் பயோகார்பன் எரிபொருளை எரிக்கும்போது, கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுவதே இல்லை. நைட்ரஜன், சல்ஃபர், குளோரின் போன்ற மாசு விளைவிக்கக்கூடிய வாயுக்களின் அளவும் குறைவாகவே வெளியேற்றுகிறது. 

ஐரோப்பிய கமிஷனின் உறுதியின்படி 2050-க்குள் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் 80 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும். அதற்காக, ஐரோப்பிய நாடுகள் வேண்டியவற்றைச் செய்தாலும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியவில்லை. மரபுசார் எரிபொருள்களைப் பயன்படுத்துவதால் வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடை கட்டுப்படுத்தினாலே, பெரும்பான்மையான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்துவிடலாம். எனவே, இந்த மாசில்லா எரிபொருள், மரபுசார் எரிபொருளான நிலக்கரி போன்றவற்றுக்கு மாற்றாக இருக்கும் என நம்பப்படுகிறது. 10 வருடங்களுக்கு முன்பே இன்கெலியா நிறுவனத்தின் மரிசா ஹெர்னாண்டஸும்( Marisa Hernández) அவரது இரண்டு நண்பர்களும் இணைந்து, கழிவுப்பொருள்களை எரிபொருளாக மாற்றும் முறையை உருவாக்க ஆரம்பித்துள்ளனர்.  இந்த பயோகார்பன் எரிபொருள், பார்ப்பதற்கு சிறிய கறுப்பு உருளையாகக் காட்சிதருகிறது.  எரிபொருளை முறையாக உற்பத்திசெய்ய ஆரம்பித்தால், 2022 -ம் ஆண்டுக்குள் 2,20,000 டன் நிலக்கரிக்கு மாற்றாக இதைப் பயன்படுத்த முடியும் என இன்கெலியாவின் இணை நிறுவனர் தெரிவிக்கிறார். நல்ல முயற்சி.