`உங்கள் சமுதாயப் பணி அளப்பரியது!’ - மலாலாவுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக விருது | Malala Yousafzai  will be honoured by Harvard University! 

வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (31/10/2018)

கடைசி தொடர்பு:15:59 (31/10/2018)

`உங்கள் சமுதாயப் பணி அளப்பரியது!’ - மலாலாவுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக விருது

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசப்ஸாயின் சமுதாயப் பணிகளைப் பாராட்டி, ஹார்வர்டு பல்கலைக்கழகம் அவருக்கு 2018-ம் ஆண்டுக்கான Gleitsman விருது வழங்கி கௌரவிக்கிறது. பெண் கல்விக்காகப் பாடுபட்டு வருபவர் மலாலா.

மலாலா

நவம்பர் 6-ம் தேதியன்று நடைபெறும் விழாவில் இந்த விருதை அவருக்கு வழங்குவதுடன், இரவு விருந்தும் அளித்தும் கௌரவிக்கப்படும் என்று ஹார்வர்டு கென்னடி பள்ளி வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிப்பதில் அளப்பரிய சாதனைகளை மேற்கொண்டுவருவதற்காக இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற மலாலா, அந்த விருதைப் பெற்ற இளம் வயதுடையவர் என்ற பெருமையைப் பெற்றார். அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதை ஆதரித்து உலகளவில் மலாலா இயங்கிவருவதற்காகவும், அவரின் பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயம் அடைந்து, பின்னர் உயிர் பிழைத்தவர். இதைத் தொடர்ந்து, பெண் குழந்தைகளின் கல்விக்கு நிதி திரட்ட ஏதுவாக 'மலாலா நிதி' என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார் அவர். 

தற்போது 21 வயதான மலாலா, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். சமுதாயப் பணிகளில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்து வருவோருக்கும், அவர்களின் பணிகள், பிறருக்குத் தூண்டுகோலாக அமைவதைக் கருத்தில் கொண்டும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இந்த விருதை வழங்க உள்ளது. இந்த விருதில் 1.25 லட்சம் அமெரிக்க டாலரும், பிரத்யேக நினைவுச் சின்னமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க