வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (01/11/2018)

கடைசி தொடர்பு:16:04 (01/11/2018)

`நானே இந்தப் பாலியல் வன்கொடுமைகளுக்குச் சாட்சி!’ - வடகொரியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

வடகொரியாவில் பெண்கள் பொம்மைகள் போன்று நடத்தப்படுவதாகவும் பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமைகள் எதிர்த்து அவர்களால் குரல் கொடுக்க முடியாது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

வடகொரியா

கிம் ஜாங் உன் ஆளுகையின் கீழ் உள்ள மர்ம பிரதேசம்தான் வடகொரியா. அரசு தரப்பிலிருந்து வெளியாகும் தகவல்கள் மட்டுமே உலகுக்கு கிடைக்கும். அங்கு மக்கள் எப்படி இருக்கிறார்கள் அந்த நாட்டின் உண்மை நிலை என்பது எல்லாமே மர்மம்தான். அங்கிருந்து வெளியேறிய கலைஞர்கள், பொதுமக்கள் எல்லாம் அது ஒரு நரகமே என்றே குறிப்பிடுகின்றனர். வெளிஉலகம் நினைப்பது போன்று வடகொரியா வளமானது இல்லை என்பதே பலரின் வாதம். 

இந்தநிலையில் வடகொரியாவில் இருக்கும் பெண்கள் நிலை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பு (Human Rights Watch) என்ற அமைப்பு விரிவான ஓர் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. வடகொரியாவை சேர்ந்த 54 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். நேர்காணல், அறிக்கைகள் போன்றவற்றை சேகரிப்பதற்காக இரண்டு ஆண்டுகளைச் செலவிட்டுள்ளனர்.

வடகொரியாவில் பெண்கள் பொம்மைகள்போல் நடத்தப்படுவதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள், வன்கொடுமைகள் எல்லாம் சர்வசாதாரணம் எனத் தெரியவந்துள்ளது. அரசு அதிகாரிகள், சிறைக் காவலர்கள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், ராணுவ வீரர்கள் ஆகியோரே இந்த செயலில் ஈடுபடுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு காவல்துறை அதிகாரி பெண்களை கூட்டிச்சென்றால் அவரது ஆசைக்கு இணங்கியே ஆக வேண்டும். இதுதவிர வேறு வழியே இல்லை. உறவில் ஈடுபட அழைத்தாலும் அல்லது பணம் கேட்டாலும் அதைக் கொடுத்தாக வேண்டும். 

இதில் பாதிக்கப்பட்ட Oh jung கூறுகையில், “நானே இந்தப் பாலியல் வன்கொடுமைகளுக்குச் சாட்சி. காவல்துறை அதிகாரிகள் வந்து அழைப்பாளர்கள். அவர்களின் பின்தொடர்ந்து செல்ல வேண்டும். மார்க்கெட்டில் இருக்கும் காலி அறைக்கு அழைத்துச் செல்லலாம் அல்லது வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லலாம் உங்களால் எதுவும் செய்ய இயலாது. பெண்களை வெறும் பொம்மைகளாகத்தான் பார்க்கிறார்கள். அங்கு அதிகாரம் மிக்க ஆண்களின் துணை இல்லாமல் பெண்களால் வாழவே முடியாது. அங்கு நீதியெல்லாம் எதிர்பார்க்க முடியாது. காவலர்கள் மீதும் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவது கிடையாது. என்றார்

2011- 2016 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வடகொரியாவிலிருந்து வெளியேறிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கூறுகையில், ஆணுக்குப் பெண் சமம் இல்லை என்பது பள்ளிகளிலே நடைமுறையில் உள்ளது. ஆண்கள் சொல்வதே பள்ளிகளில் எடுபடும் அவர்கள் எடுப்பதுதான் முடிவு. அதிகமான பெண்கள் பணிபுரிந்தாலும் ஆண்கள்தான் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் உள்ளனர். மாணவர்கள் அங்கு லீடர்களாவே உள்ளனர். அங்கு எல்லாமே பெண்களுக்கு எதிராகவே உள்ளது. பெண்களின் திருமண வயது 17 ஆகவும் ஆண்களின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது. வடகொரியாவில் 90 சதவிகித பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள்.